புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 23, 2018)

எங்கள் பிதா சத்தியபரர்

நீதிமொழிகள் 29:12

அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.


பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடி னார்கள். ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை. மேற்குறிப்பிட்ட சம்பவ த்திலே, நீதியை நடப்பிக்கும்படியும், தேவனுக்கென்று தூய பலிகளை செலுத்தும்படிக்கும், ஜனங்களை தேவ னிடத்திற்கு நடத்த நியமிக்கப்பட்ட வர்கள், தங்கள் நோக்கம் நிறைவே றும்படி பொய் சாட்சிகளை தேடி னார்கள். பிசாசானவனே பொய்க்கு பிதாவாயிருக்கின்றான். சத்தியம் அவனிடம் இல்லை. பொய்க்கு இடங் கொடுக்கின்றவர்கள் பிசாசினால் வழிந டத்தப்படுகின்றார்கள். அதன்படி இங்கு குறிப்பிடப்பட்டவர்களும் பிசாசானவ னினாலே வழிநடத்தப்பட்டார்கள். அதி பதியானவன், பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழிய க்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள் என்ற பிரகாரம் அன்றிருந்த யூத மூப்பர் சங்கத்தார் யாவரும் பொய்யை நாடினார்கள். பிரியமான வர்களே, இந்த சம்பவங்களை மீளாய்வு செய்யும் போது, எவ்வளவு துணிகரமான செயல்களை அதிகாரிகள் செய்தார்கள் என்பதை காண க்கூடியதாக இருக்கின்றது. பொய்யர்கள், பொய்ச் சாட்சியை ஆதரி க்கின்றார்கள். இல்லாத ஒரு காரியத்தை தங்கள் சிந்தையிலே உருவ மைத்து நாடகமாக்கிக் கொள்கின்றார்கள். நாங்களோ தேவனுடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டிருக்கின்றோம். எங்கள் பிதாவாகிய தேவன் சத்தியபரர். சில வேளைகளிலே, பொய்சாட்சிகளால் நாங்கள் துன்பங்களை சந்தித்திருக்கலாம் அல்லது சந்திக்க நேரிடலாம். அந்த நிலைகளிலே எங்கள் கர்த்தராகிய இயேசுவை மனக் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். எப்பொழுதும் சத்தியத்தையே பேசுங் கள். கர்த்தர் எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நாள் நெருங்குகின்றது. எனவே நீடிய பொறுமையுள்ளவர்களாயிருங்கள். ஆனால் நீங்கள் எந்த விதத்திலும் பொய்ச்சாட்சிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உடந்தையாகிவிடாதிருங்கள்.

ஜெபம்:

சத்தியமுள்ள தேவனே, நான் ஒருபோதும் பொய்களுக்கு உடன்படாதபடி, எப்போதும் உண்மையை பேசி உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - யோவான் 8:40-44