புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2018)

நாங்கள் பேசும் வார்த்தைகள்

மத்தேயு 12:37

ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.


எங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமல்ல, எங்கள் நாவின் சொற்களைக் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வேதாகமத்திலே அநேக அறிவுரைகளை பார்க்கின்றோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக பாவ மன்னிப்பை பெற முன் எங்கள் எண்ணங்களில் தோன்றிய யாவையும் நாங்கள் பேசியிருக்கலாம். ஆனால் இப்போதோ, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தத்தி னாலே பாவமறக் கழுவப்பட்டு, தேவனு டைய துதியை சொல்லி வருகின்ற ஜனங்களாக அழைக்கப்பட்டிருக்கின் றோம். பரிசுத்த தேவனின் துதியை சொல்லும் நாவினால், ஆகாத சம்பா ~ணைகளை செய்யக் கூடாது. நல்ல மனு~ன் தன் இருதயமாகிய நல்ல பொக்கி~த்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனு ~ன் தன் பொல்லாத பொக்கி~த்திலி ருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான். மனு~ர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறி த்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கூறியிருக்கின்றார். பொது வாக நாங்கள் எங்கள் வார்த்தைப் பிரயோகங்களில் அவதானமு ள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், எங்களின் எண்ணத்திற்கு எதி ரான காரியங்கள் நடக்கும் போது, எங்கள் வார்த்தைப் பிரயோ கங்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீதியை பேசுகின்றேன் என்று கூறி, வயதெல்லைகளை மதியாமல், வாய்க்கு வந்த பிரகாரம் எங்களுக்கு மூத்தவர்களை கடிந்து கொள்ளக் கூடாது. சகல கனத்துடனும் சாந்தத்துடனும் எங்கள் நடக்கையாலே நாங்கள் தேவனுக்கு சாட்சிகளாக இருக்க வேண்டும். முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புரு~ரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோ தரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு. உத்தம விதவைக ளாகிய விதவைகளைக் கனம்பண்ணு என்று வேதம் கூறும் பிரகாரமாக நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

தயவுள்ள பரலோக தந்தையே, எந்த வேளையிலும் சகல கனத்துடனும் சாந்த குணத்துடனும் மற்றவர்களோடு பேசும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக் 3:5-18