புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 21, 2018)

மனிதர்கள் தூற்றும் போது...

2 கொரிந்தியர் 10:4

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்ற வைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.


மாலை நேரத்திலே திடீரென்று வீட்டிற்கு வந்த விருந்தாளி ஒருவர் சில மணிநேரம் பல காரியங்களைபற்றி உரையாடிய பின்னர், அந்த வீட்டுக்காரரை நோக்கி “அடுத்த கிராமத்திலே வாழும், குறிப்பிட்ட குடும்பத்தினர், உங்கள் பிள்ளைகளைப் பற்றி அவதூறாக பேசித் திரிகின்றார்கள்” என கூறி வீடு திரும்பிவிட்டார். இந்த திடீர் செய்தி அந்த குடும்ப தலைவனையும் அவன் மனைவியையும் கலங்கடித்ததால், அன்றிரவு அவர்களால் தூங்க முடிய வில்லை. பல எதிரிடையான சிந்த னைகள் மனதிலே தோன்றின. அந்த சிந்தனைகள், இருவரின் மனதிலே தோற்றம் பெற்று, பெரிய உருவமாகி விட்டது. தங்களை குறித்து விரோத மாய் பேசியவர்களின் வாய்க்கு முடிவு வைப்போம் என்று விடியும்வரை காத்திருந்தார்கள். பிரியமானவர்களே, சில வேளைகளிலே இப்படியான சூழ்நிலைகளுக்கு நீங்கள் தள்ள ப்பட்டிருக்கலாம் அல்லது தள்ளப்படலாம். அந்த நேரங்களிலே, எங்கள் மனதிலே நாடகத்தை மேடையேற்றுவது போல, காரியங்களை குறித்து ஊகம் செய்யாமல், தேவனுடைய பாதத்திலே ஜெபிப்பதே அவசியமானது. விருந்தாளியாக வந்தவர் கூறியது உண்மையாக இருக்கலாம் அல்லது பொய்யாக இருக்கலாம். அது என்னவாக இருந்தாலும், முதலாவதாக, நாங்கள் பாவம் செய்யாதபடிக்கு எங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தை தூய்மையாக காத்துக் கொள்ளும்படி தேவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும். பின்பு, எங்கள் சிந்தையிலே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைக ளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவை களோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவை களோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தி த்துக்கொண்டிருக்க வேண்டும். எங்கள் போராயுதம் மாம்ச பெலன் அல்ல. அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைக ளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

ஜெபம்:

நீடியபொறுமையுள்ள தேவனே, மனிதர்கள் தூற்றும் போது, எங்கள் மாம்சத்தின்படி அவர்களுடன் சண்டை செய்யாமல், பொறுமையுடன் ஜெபத்திலே தரித்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8