புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2018)

ஆறுதலின் தெய்வம் இயேசு

பிலிப்பியர் 4:6

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.


“என்ன யோசிக்கின்றீர்கள்?” என்று ஒரு வயதானவரை ஒரு வாலிபன் வினாவியபோது, “எப்படித் தம்பி மனு~ன் யோசிக்காமல் இருப்பது?” என்று தயவாக பதில் அளித்தார். மனிதனுடைய மனதிலே பல யோச னைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஆனால் நீங்கள் ஒருவரைப் பார் த்து என்ன கடுமையாக யோசிக்கின்றீர்கள் எனக் கேட்டால், பொது வாக “ஒன்றுமில்லை சும்மா இருக்கின் றேன்” என்பதையே மறுமொழியாக கூறிக் கொள்வார்கள். மனிதர்கள் பல காரியங்களை குறித்து கவலை அடை வதால், நாளையைக் குறித்த பயம் மனதில் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட பயம், தேவ விசுவாசத்திற்கு விரோத மாக செயற்படுகின்றது. கவலைப்ப டுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட் டுவான்? என்று இயேசு கேட்டார். கவ லைப்படாதே என்று கூறுவது சுலபம், ஆனால் என் வாழ்க்கையிலே ஏற்பட்ட தொடர்ச்சியான துன்பங்களை அனுப வித்தால்தான் தெரியும் என்று மனித ர்கள் கூறுவதுண்டு. அதில் உண்மை உண்டு. ஆனால், இயேசு கூறுகி ன்றார், அதைப்பற்றி யோசித்து கலங்கிக்கொண்டே இருப்பதால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. வருத்த ப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னண்டை வாரு ங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு வாக்குரைத்திருக்கின்றார். இந்த வார்த்தையை விசுவாசியுங்கள், உள்ளத்திலே அறிக்கையிடுங்கள். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படா மல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள், அப்பொழுது, எல்லாப் புத்திக் கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். எனவே நடந்தவைகளையும் நடக்க இருக்கின்றவைகளையும் யோசித்து கலங்காமல் இயேசு அண்டை கிட்டிச் சேருங்கள்.

ஜெபம்:

ஆறுதல் தரும் தெய்வமே, என் வாழ்க்கையை கலக்கும் சவால்களை எண்ணி கவலையடைந்து பின்வாங்கிப்போகாமல், உம் வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28