புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 19, 2018)

நல்ல கோதுமை மணிகள்

மத்தேயு 3:12

அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்;


இன்றைய உலகிலே சிட்சைகளையும் கடிந்து கொள்ளுதலையும் பிள்ளைகள் அற்பமாக எண்ணுகின்றார்கள். தாங்கள் வாழும் சந்ததி அறிவு பெருத்தவர்கள் என்றும், தங்கள் பெற்றோர் முன்னோர் வாழ்ந்த நாட்கள் நாகரீகம் அற்றது என்றும், நல்ல ஆலோசனைகளை தள்ளி விடுகின்றார்கள். நல்ல ஆலோசனைகளை தள்ளி விடு பவர்கள், ஆண்டுகள் கடந்து செல்லும் போது, தங்கள் வாழ்க்கை யிலே மிகவும் கசப்பான அனுபவங் களை அடைந்து, வாழ்க்கையில் பல பின்னடைவுகளை சந்தித்த பின்னரே தங்கள் மதியீனத்தை உணர்ந்து கொள் கின்றார்கள். அவர்களில் சிலர், தீங்கான வழிகளிலே ஏற்படும் கசப்பான அனுப வங்களில் இருந்து மீள முடியாமல் மாண்டு போகின்றார்கள். எங்களுடைய தேவனாகிய கர்த்தரும், நல்ல தந்தை யைப் போல, சில வேளைகளிலே எங்களை சிட்சித்து, கண்டித்து நடத்துகின்றார். அந்த வேளைகளிலே, நாங்கள் அந்த சிட்சையை அற்பமாக எண்ணாமல், தேவனை இன்னுமாய் இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். கோதுமையை நன்றாக விளக்கி களஞ்சியத்தில் சேர்ப்பது போல அவர்தாமே எங்களை நித்திய ஜீவனிலே சேர்த்துக் கொள்வார். மோட்ச வீட்டிலே அங்கே அவருடனே மகிழ்ந்திருப்போம். ஆனால், சிட்சையை அற்பமாக எண்ணி, தங்கள் கண்போன வழி யிலே துணிகரமாக வாழ்பவர்கள் முடிவிலே நித்திய ஆக்கினையை அடைந்து கொள்வார்கள். “இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.” நல்ல மரங்கள் அதிக கனி கொடுக்கும்படி தேவன் அதை இன்னும் கிளைநறுக்கி சுத்தம் செய்கின்றார், அதை விரும்பாத மரங்களின் அடியிலே கோடாரி வைக்கப்பட்டிருக்கின்றது. “பிரம்பை அசட்டை செய்கின்றவன் கோடாரியை சந்திக்க நேரிடும்” என்று ஒரு வேத வல்லுனர் கூறினார். எனவே நாங்கள் எப்போதும் தேவ சிட்சையை நன்மைக்கே என்று ஏற்றுக் கொண்டு, இன்னும் தேவனை கிட்டிச் சேருவோம். அவர் எம்மை நல்ல கோதுமை மணிகளாக்கி தம்மோடு சேர்த்துக் கொள் வார்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய சிட்சையை அற்பமாய் எண்ணாமல், அவற்றை நன்மைக்கே என்று எண்ணி, உம்முடைய ஆலோசனைகளின் வழியில் நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 13:6-9