புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2018)

இரக்கங்களுக்கு முடிவில்லை…

புலம்பல் 3:22-23

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரி தாயிருக்கிறது.


ஏரேமியா என்னும் தீர்க்கதரிசியின் நாட்களிலே, இஸ்ரவேல் தேசத்தின் அக்கிரமத்தின் மிகுதியினால் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பவர்கள் குறைந்து கொண்டே போனார்கள். அது மட்டுமன்றி தேவன் கூறும் மன ந்திரும்புதலின் வார்த்தைகளை உரைத்த தேவ மனு~னாகிய ஏரேமி யாவை துன்புறுத்தினார்கள். அப்படி யான சூழ்நிலையின் மத்தியிலும், கசப் பான அனுபவங்கள் மத்தியிலும், தேவ மனு~னாகிய ஏரேமியா தேவனை நம்பி யிருக்கிறவர்களுக்கு தேவ கிருபையை வெளிப்படுத்திக் கூறினார். “நாம் நிர் மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிரு பையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோ றும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திரு க்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.” ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய கிருபை காலைதோறும் புதிதாயிருக்கின்றது. எனவே அழுத்தும் சூழ்நிலைகளை கண்டு மனம் சோர்ந்து, இனியும் ஒரு விடிவு உண்டோ என்று தளர்ந்து போய்விடாதிருங்கள். கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. ஒரு வேளை, கடந்து போன அனுபவங்கள் கசப்பாக தோன்றலாம் அல்லது தற்போதைய நிலை கசப்பாக இருக்கலாம். எந்த நிலையானாலும், தேவனுடைய நேரத்திற்கு காத்திருக்கின்றவர்கள், ஆனந்தக்களிப்படைவார்கள். நாங்கள் தேவனுக்காக காத்திருந்தது, எத்தனை நன்மை என்று மனதார கூறும் நாட்கள் வரும். தேவனுடைய கணக்கு இந்த உலகத்துடன் முடிந்து போவதில்லை. எனவே மேற்கூறிய வார்த்தைகளை தினமும் அறிக்கையிட்டு, தேவனுடைய நன்மையை காண நம்பிக்கையோடே தரித்திருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உம்முடைய காருண்யத்தாலே இழுத்துக் கொண்டவரே, உம்முடைய கிருபை என்றுமுள்ளது என்பதை உணர்ந்தவனாய், உம்முடைய நேரத்திற்கு காத்திருக்கும் பொறுமையைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 136:1-5