புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 13, 2018)

எச்சரிப்பின் சத்தங்கள்

நீதிமொழிகள் 29:1

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.


நற்பண்புகளுள்ள வாலிபன் ஒருவன், நெடுஞ்சாலைகளில் வாகனத்தை வலு வேகமாக ஓட்டும் பழக்கமாக்கிக் கொண்டான். இதனால் பெற் றோர், குடும்பத்தாரால் பல முறை கடிந்து கொள்ளப்பட்டான். உறவி னர் மற்றும் நண்பர்களில் சிலர் அறிவுரைகளை கூறினார்கள், அவனோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒரு சில முறை பொலிசாரால் தடு த்து நிறுத்தப்பட்;டு, அபராதமும் வழங்கப்பட்டது. ஆனால் அதையும் அவன் பொருட்டாக எண்ணவில்லை. ஒரு நாள் அவன் இப்படியாக வாக னத்தை ஓட்டிக் கொண்டு சென்ற போது, குறிப்பிட்ட சூழ்நிலையில் வாக னத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் போனதினால், பாரிய விப த்தில் அகப்பட்டு, தன் உயிரை மாய் த்துக் கொண்டான். பல முறை அறி வுரை கூறப்பட்டும், அதற்கு செவி மடுக்காமல், தனக்கு கிடைத்த அரு மையான வாழ்வை சடுதியிலே இழந்து போனான். வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் போது, வீதி நெடுஞ்சாலை விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். பின்பு எழுத்துப் பரீட்சை மற் றும் நடைமுறை வீதிப் பரீட்சையில் சித்தி பெற வேண்டும். எனவே அந்த வாலிபன் விதிமுறைகளை நன்கு அறிந்திருந்தான். அதற்கு மேலாக வரவிருக்கும் ஆபத்தை குறித்து முன்னறிவிப்பதற்கு பெற் றோர், குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் இருந்தார்கள். இவை யாவும் அவனுக்கு கிடைத்த சகாயம். ஆனால் அவைகளை அவன் தன் வாழ்வின் இடஞ்சல்களாக எண்ணினான். இதற்கொத்ததாகவே சில மனிதர்களுடைய வாழ்க்கையிலும் பல நற்பண்புகள் இருந்தா லும், சில விடயங்களிலே மனமேட்டிமை அடைந்து தேவ ஆலோச னைகளை தள்ளி விடுகின்றார்கள். எங்கள் வாழ்க்கையிலும், தேவ ஆலோசனைகள் அறிவுரைகள், எச்சரிப்புக்கள் பலர் வழியாக எங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. எந்த ஒரு காரியத்திலும், தேவனுடைய ஒழுங்குக்கு எதிராக நாங்கள் மனமேட்டிமை கொள்ளாமல், நன்மையான அறிவுரைகளுக்கு நாங்கள் செவிசாய்த்து, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் மாற்றியமைக்க வேண்டிய விடயங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, உம்முடைய எச்சரிப்பின் சத்தத்தை ஒருபோதும் அசட்டை செய்யாமால், என் வாழ்வை ஆராய்ந்து அறிந்து, உம்முடைய வார்த்தையின்படி நடக்க பிரகாசமுள்ள மனக்கண்களைத் தாரும் .இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:24-27