புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 10, 2018)

தீர்க்கமான முடிவுகள்

1 தெச 5:24

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.


பிள்ளைகள் தவறு செய்யும் போது, சில வேளைகளிலே பெற் றோர்கள் கோபம் கொண்டாலும், பின்பு மனஸ்தாபப்பட்டு அவர்க ளுக்கு இரங்குகின்றார்கள். “உங்களின் தகப்பனாயிருக்கிற ஒருவனிட த்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல் லது முட்டையைக் கேட்டால், அவனுக் குத் தேளைக் கொடுப்பானா? பொல் லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள் ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடு க்க அறிந்திருக்கும்போது, பரம பிதா வானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொ ள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவி யைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்று இயேசு கூறியிருக்கின்றார். தேவனாகிய கர்த்தரு டைய வாக்குத்தத்தங்கள் உண்மையான வைகள். கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. எங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்தத் தீர்மானத்திலே தியாகங்கள் இருக்க வேண்டும். ஆபிரகாமை கர்த்தர் அழைத்த போது அவர் தன்னுடைய தேசத்தைவிட்டு, தன்னு டைய இனத்தவரைவிட்டு புறப்பட்டுப் போனார். குறித்த காலத்தில் தேவன் அவரை மேன்மைப்படுத்தினார். இன்று எங்களுடைய வாழ் க்கையிலும், சில வேளைகளிலே, எங்கள் பெலவீனங்கள் நீங்கும்படி யாக நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கலாம். அவைகள் விடமுடி யாமல் இருக்கும் எங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றும் பாவ பழ க்கங்களாக இருக்கலாம். எங்கள் பெலவீனத்திலே தேவனுடைய கிருபை போதுமானது. அதனால் நாங்கள் தொடர்ந்து பாவத்திலே இருந்து கொள்ளலாம் என்பது பொருள் அல்ல. தேவனுடைய வார்த் தையைக் கேட்டு, அதற்கு கீழ்ப்படிந்து, அந்த வார்த்தையின்படி, எங் கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தீர்மானங்களை நாங்கள் எடுக்க வேண் டும். நாங்கள் செய்யமுடியாததை தேவன் எங்களிடம் எதிர்பார்ப்பதி ல்லை. பொல்லாங்காய்த் தோன்றுகிறவைகளையும் அதை உண்டு பண்ணும் காரணிகளையும் விட்டு விலகுங்கள்.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, நீர் அழைத்தவர் உண்மையுள்ளவர். அதே போல நாங்களும் உண்மையுள்ள மனதோடு உம்மை சேவிக்க, தீர்க்கமான முடிவுகளை எடுக்க பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:1-13