புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 09, 2018)

தேவனுடைய கட்டளைகள்

மத்தேயு 15:6

உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.


சுத்தம் சுகம் தரும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் சின்ன வய திலே பிள்ளைகளுக்கு அறிவுபுகட்டுகின்றார்கள். சாதாரணமாக கைகளை கழுவி விட்டு சாப்பிடுவதால் நாங்கள் பல நோய்களிலி ருந்து எங்கள் சரீரத்தைக் காத்துக் கொள்கின்றோம். இது உண் மையான கூற்று. எந்த சூழ்நிலையிலும் இதை தவறாமல் செய்ய முயற்சிக்கின்றோம். இதற்கு மேலாக உள்ளத்திலே உள்ள சுத்தம், ஆத்துமா வுக்கு ஒளஷதமாக இருக்கின்றது. ஆனால் பொதுவாக மனிதர்கள் அகத் திலுள்ள சுத்தத்தைக் குறித்த கரிச னையற்றவர்களாக மாறிவிடுகின்றார் கள். ஒரு சமயம் யூத மதத்தைச் சார்ந்த பரிசேயர், வேதபாரகர் என்ற பிரிவினர், இயேசுவின் சீ~ர்கள், முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி கைகழுவாமல் சாப்பிடுகின்றார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். அப்படிப்பட்ட செயலை தீட்டு என்று கருதியிருந்தார்கள். ஆனால், இந்த மதத்தின் முக்கிய உறுப்பினர்களாகிய இவர்கள், தங்கள் தகப்பன், தாய் வயது சென்ற பின், அவர்களை கனம்பண்ணி, அவர்களை கவனிப்பதற்கு பதிலாக, ஒரு உதவிப் பணத்தை கொடுத்தால், தாய் தகப்பனைக் குறித்த கடமை தீர்ந்தது என ஜனங்களுக்கு போதித்து, தாங்களும் அப்படியே செய்;து வந்தார்கள். இதையும் தங்கள் பாராம்பரியமாக்கிக் கொண்டார்கள். இப்படியாக இன்னும் அநேக தேவ கட்டளைகளை மீறி நடப்பதை தங்கள் பாரம்பரியமாக்கிக் கொண்டார்கள். இந்த உலகத்தோடு அழிந்து போகின்ற இந்த சரீரத்தை பேணிப் பாதுகாப்பதற்கு அநேக முயற்சிகளை எடுக்கின்றீர்களே, ஆனால் உங்கள் ஆத்துமாவை நித்திய நித்தியமாய் பாதாளத்திற்கு தள்ளும்படியாய் தேவனுடைய கட்டளைகளை வியத்தமாக்குகின்றீர்களே என்று இயேசு பதில் கூறினார். பிரியமானவர்களே, சரீரத்திலே சுத்தமாயிருப்பது நல்லது, அதைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே அநேக வார்த்தைகள் உண்டு. ஆனால் அதற்கு மேலாக, எங்கள் ஆத்துமாவை குறித்த விடயங்களில் நாங்கள் கரிசனையுள்ளவர்களாக இருக்க வேண்டும். எங்கள் இருதயத்தை சுத்தமாக காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, எங்கள் சரீரங்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளைவிட, ஆத்துமாவை பாதுகாக்கும் உம் கற்பனைகளை மனதார அனுசரித்து நடக்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 7:1-13