புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 07, 2018)

தேவனுடையவர்கள்

1 பேதுரு 2:9

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணிய ங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப் பட்ட சந்ததியாயும், ராஜ ரீகமான ஆசாரியக்கூட் டமாயும்> பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


தாவீது என்னும் இளைஞன், தன் தந்தையிடம் இருந்த கொஞ்ச ஆடு களை மேய்த்து வந்தான். அவனுடைய தந்தையின் பெயர் ஈசாய். இந்த இளைஞனாகிய தாவீதை பலரும் பலவிதமாக பார்த்தார்கள். தேசத்திற்கு புதியதொரு ராஜாவை அபிN~கம் செய்ய, ஈசாயின் வீட் டிற்கு சாமுவேலை தேவன் அனுப்பினார். அந்த வேளையிலே அவன் தந்தை, தாவீதின் மூத்த ஆறு சகோதரர்களில் ஒருவனையே தேவன் தெரிந்திருப்பார் என எண்ணினான். தாவீதையோ, தன் ஆடுகளை பார்க்கும்படி அனுப்பியிருந்தான். கோலியாத் என்னும் இராட்சதன் இஸ்ரவேலரை கலங்கடித்துக் கொண்டி ருக்கும் போது, அவனோடு யுத்தம் செய்ய, இஸ்ரவேலின் யுத்தவீரர்கள் யாவரும் பயந்தார்கள். தாவீதோ, நான் அவனோடு யுத்தம் செய்து ஜெயி ப்பேன் என்றான். அதற்கு ராஜாவா கிய சவுல், நீ இளைஞன், யுத்தத்தி ற்கு பழக்கமில்லாதவன் என்றார். அவ னுடைய மூத்த சகோதரர், உன் மன நிலை எங்களுக்கு தெரியும், நீ போய் தந்தையின் ஆடுகளை பார் என்றார் கள். கோலியாத், தாவீதைக் கண்டதும் அவனைக் கேலி செய்து நகைத்தான். இப்படியாக தாவீதை பலரும் பல விதமாக பார்த்தார்கள். ஆனால், உள் ளத்தை ஆராய்ந்தறிகின்ற தேவன், அவனை மேன்மையாக்கும் படி முன்; குறித்திருந்தார். தன் இருதயத்திற்கு ஒத்தவன் என்று சொல்லி தாவீதை அழைத்தார். அவனை அபிN~கித் தார், அவன் கோலியாத்தை இலகுவாக வெற்றி கொண்டான். பிற்பாடு சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக உயர்த்தப்பட்டான். எனவே, மற்றவர்கள் உங்களை எப்படியும் பார்க்கட்டும். நீங்களோ, சர்வ வல்லமையுள்ள தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அவருடைய சொந்த ஜனங்களாயிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் தயங்காமல், சாந்தமுள்ள ஆவியோடு தேவனுடைய நன்மைகளை அறிவியுங்கள்.

ஜெபம்:

பராக்கிரமம் உள்ள தேவனே, மனிதர்கள் கூறும் அபிப்பிராய ங்களை கேட்டு சோர்ந்து போகாமல், தாழ்மையுள்ள உள்ளத்தோடு பரலோகத்தின் புண்ணியங்களை அறிவிக்க என்னை வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமுவேல் 16:7