புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 06, 2018)

திருப்தியாக்கும் தேவன்

சங்கீதம் 90:14

நாங்கள் எங்கள் வாழ் நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.


கேட்டுக்கு செல்லும் வாசலின் வழி விசாலமாயிருந்தும், பாதாளமும், அழிவும் திருப்தியாவதில்லை. உலக தோற்றமுதல் இருந்ததும், இப்போதும் இருப்பதும் உலக முடிவு வரைக்கும் வரப்போவதுமான எல்லா ஆத்துமாக்களும் பாதாளத்திற்கு செல்ல ஒப்புக் கொடுத்தாலும் அது திருப்தியாவதில்லை. அது இன்னுமின்னுமாய் மனிதர்களை வாரிக் கொண்டே இருக்கும். அது போலவே, மனிதனுடைய மனம் இந்த உலகம் தரும் எந்தக் காரியத்தினாலும் திருப்தியாவதில்லை. சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிர யாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? ஒரு சந்ததி போகிறது, மறு சந் ததி வருகிறது. பூமியோ என்றென்றை க்கும் நிலைத்திருக்கிறது. எல்லாம் வரு த்தத்தினால் நிறைந்திருக்கிறது. அது மனுஷரால் சொல்லிமுடியாது. காண்கி றதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிர ப்பப்படுகிறதுமில்லை என்று மனிதனுடைய மனம் இந்த பூமிக்குரிய வைகளால் திருப்தியாவதில்லை என்று பிரசங்கி கூறுகின்றார். இதனால் தான் தேவனுடைய மனுஷனாகிய யோவான் “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை யுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவை களல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” என்று கூறுகின்றார். தேவனு டைய கிருபை காலைதோறும் புதிதாக இருக்கின்றது. தேவனுடைய கண்களிலே கிருபையை பெற்றவன், இயேசு வழியாக பாவத்தி லிருந்து மீட்பை கண்டடைகின்றான். மனிதர்களின் ஆத்துமாவைத் திருப்தியாக்கும்; ஜீவ உணவும், ஜீவ தண்ணீரும் உண்டு. எனவே எங்கள் கண்களை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் பதிய வைக்கும் போது, எங்கள் மனம் பரலோத்திக்குரிய மேன்மையான வைகளை வாஞ்சிக்கும்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் தற்காலிகமானவைகள். அதனால் நான் திருப்தியடைய முயற்சி செய்யாமல், உம்மிலே திருப்தியடையயும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 27:20