புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 04, 2018)

நிச்சயமாக பலன் உண்டு

நீதிமொழிகள் 27:18

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.


பல தென்னம்பிள்ளைகளை வைத்த குடியானவன், பல வருடங்களாக அதன் பலனை பெறுவதற்காக பொறுமையாக இருக்க வேண்டியா தாக இருந்தது. நாளாந்த வாழ்க்கையை நடத்த, பல சவால் களை எதிர்நோக்கும் அந்த ஏழைக் குடியானவனுக்கு, தற்போது பல தேவைகள் இருந்த போதும், தான் நாட்டிய தென்னங்கன்றுகளை நன்றாக பராமரித்து வந்தான். குறித்த காலத்திற்கு பின் அவன் பிரயாசத்தின் பலனை அனுபவித்து வந்தான். மனிதர்களுடைய வாழ்விலே, தங்கள் தற்போதைய நிலையை திருப் திப்படுத்த உடனடியான பலன்களை நாடுகின்றார்கள். சில வேளைகளிலே, எங்கள் நிலையை மாற்ற, ஏதாவது குறுக்கு வழிகள் இருக்கின்றதா என்று கூட ஆராய்ந்து பார்ப்பார்கள். ஆனால் அவையெல்லாம் தற்காலிக மான திருப்தியை மனிதர்களுக்கு கொடுக்கின்றதே அல்லாமல் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவிடு வதில்லை. தன் எஜமானனுக்கு விசுவாசமான ஊழியன், தன் தற் காலிக நலனைக் கருதாமல், தன் எஜமானன் தனக்கு ஒப்புவித்ததை இரவும் பகலுமாக காத்துக்; கொள்கின்றான். அவன் எஜமானன் அவனை சந்திக்கும் நாளிலே, பெரிதான பலனை பெற்றுக் கொள் வான். எங்களை அழைத்த பரலோக எஜமானன் உண்மையுள்ளவர். வாக்கு மாறாதவர். அவருடைய ராஜ்யத்தின் மேன்மைக்காக உழைக் கும்படி எங்களை அழைத்தார். பல சவால்கள் நிறைந்த இந்த யாத் திரையிலே, அவருடைய சித்தத்தில் கண்ணும்கருத்துமாக இருக்கும் போது, சந்திப்பின் நாளிலே, பெரிதான பலன் உண்டு. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப் பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் என்று இயேசு கூறினார். எனவே பொறுமையோடு இலக்கை நோக்கி முன்னேறுங்கள். தற்காலத்திலே தோன்றும் பாடுகள் யாவும் தற்காலிகமானது. அழியாத நித்திய வாழ்வை தரும் எங்கள் எஜமானன் திரும்ப வந்து எங்களை தம்முடன் சேர்த்துக் கொள்வார். அங்கே ஈடு இணையில்லாத மகிமை எமக்குண்டு.

ஜெபம்:

பரலோக தேவனே, பலனைக் காணும்படி தான் விதைத்ததை பராமரித்து வரும் நல்ல விவசாயியைப் போல, நானும் நீர் ஒப்புக் கொடுத்ததை காத்துக் கொள்ள என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 12:26