புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2018)

யாருடன் இசைந்திருக்கின்றோம்?

நீதிமொழிகள் 27:17

இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.


ஒரு வாலிபன், அனுபவமிக்க, வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழும் ஆசிரியர் ஒருவரிடம், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிர ச்சனைகளை எப்படி மேற்கொள்வது என்பதைப் பற்றி ஆலோசனை கேட்பதற்காக சென்று வருவான், அந்த ஆசிரியரும், தயவோடு, அவனை ஏற்றுக் கொண்டு நல்ல ஆலோசனைகளை கூறி வந்தார். நல்ல புத்திமதிகளை கூறிய அவர், சில வேளைகளிலே அவனை அன் போடு கண்டித்தார். அந்த ஆசிரியரின் வழியை பின்பற்றிய அந்த வாலிபன், சில ஆண்டுகளுக்கு பின், தன் சக கூட்டாளிகளுக்கு அறிவுரை கூறும் அள விற்கு ஞானத்திலே வளர்ச்சியடைந் தான். இரும்பை இரும்பு கூர்மையா னதாக்குவது போல, அப்படியே மனு ~னும் தன் சிநேகிதனுடைய முகத் தை உருமாற்றுகின்றான். நாங்கள் எவருடன் நட்பு வைத்து, இசை ந்திருக்கின்றோமோ அவர்களுடைய சுபாவங்கள் எங்களில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும். வாக்குவாதங்களை, வாக்குவாதங்களால் வெற்றி பெற முயற்ச்சி செய்யும் மனிதர்களுடன் நாங்கள் இசைந்திருந்தால், நாள டைவில் நாங்களும் வாக்குவாதங்களை வாக்குவாதங்களால் தான் வெற்றி பெற முடியும் என்ற மனநிலை உடையவர்களாக மாறி விடு வோம். சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதர னிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு. ஆனால் எங்கள் சிநேகிதர்கள் யார் என்பதையும், அவர்கள் யாரைப் பின்பற்றுகின்றார் கள் என்பதையும் நாங்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். நான் தேவனைப் பின்பற்றுகின்றேன், ஆனால் என் நண்பன் அப்படி யல்ல. ஆனால் இயேசுவின் இரட்சிப்பைப் பற்றி கூற இது எனக்கு ஒரு வாய்ப்பு என கூறி தேவனை அறியாதவர்களுடன் நெருங்கிப் பழ குகின்றவர்கள் இருக்கின்றார்கள். அதைக் குறித்து நீங்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். தேவனுடைய வழிநடத்துதலை நீங்கள் எப்போதும் பின்பற்றுகின்றீர்கள் என நிச்சயித்துக் கொண்டால் நன்மை உண்டாகும். ஆனால் நீங்கள் தேவ சத்தத்தை கேட்க தவறினால், தேவனை அறியாத நண்பன் வழியாக அந்நிய சத்தங்களை கேட்க நேரிடும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தந்தையே, என்னுடைய முகத்தின் சாயல் இயே சுவைப் போல மாறும்படிக்காய் உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் மனதுள்ளவர்களுடன் இசைந்திருக்கும்படி என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 6:14-17