புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 02, 2018)

ஆச்சரியமான வழிகள்

ஏசாயா 55:9

பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்ப டியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.


சாதாரணமாக ஒரு பிரபல்யமான ஸ்தாபனத்தின் சிரேஷ்ட அதிகா ரியாக கடமையாற்றுவதற்கு பல தகைமைகள் அவசியமானது என கூறிக்கொள்வார்கள். குறிப்பிட்ட கல்வியறிவு, அந்த தொழில்து றையிலே அனுபவம், மற்றய அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு, பாவையிலே தேர்ச்சி, ஏற்றுக் கொள்ளக்கூடிய தோற்றம் இப்படியாக பல தகமைகள் தேவை என கூறுவா ர்கள். இவை இந்த உலகத்தின் ஆளு கையின் ஒழுங்கு முறை. அவற்றை பின்பற்றுவதில் தவறில்லை, ஆனால் இவைகளால்தான் காரியம் வாய்க்கும் என்று இவைகளில் நம்பியிருப்பது விருதா. எங்களுடைய வாழ்க்கையிலும், குறிப்பிட்ட ஒரு காரியம் இன்னபிரகா ரமாகத்தான் எங்களுக்கு கைகூடும் என்று நாங்கள் சிந்திப்பதுண்டு. இல குவான உதாரணமாக பணத்தை எடு த்துக் கொள்ளலாம். அதாவது, பல தேவைகள் மனிதர்கள் வாழ்வை அழு த்துவதால், பணம் இருந்தால் அந்த தேவைகளை சந்தித்து கொள்ளலாம், எனவே எப்படியாவது பணத்தை பெற் றுக் கொள்ள வேண்டும், அதுவே வழி! அந்த தேவைகள் சந்திக்கப் படும்போது எனக்கு சமாதானம் உண்டாகும் என வாழ்பவர்கள் பலர். ஆனால் அந்த தேவைகள் சந்திக்கப்பட்டபின் அதை விட இரட்டி ப்பான தேவைகள் உண்டாகும். தேவனுடைய வழிகள் அதிசயமா னவைகள். அவர் உலக வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர் அல்ல. நூற்றிருபத்தேழு நாடுகளை அரசாண்ட அகாஸ்வேரு என்னும் ராஜாவின் நாட்களிலே, அரண்மனை வாசலில் காத்திருந்த மொர்த காய் என்னும் சாதாரண மனிதன், ராஜாவின் அரண்மனையிலே மிக வும் பெரியவனானான். அடிமையாக இஸ்மவேலருக்கு விற்கப்பட்ட யோசேப்பு என்னும் வாலிபன், அக்காலத்திலே, சிறந்து விளங்கிய, எகிப்து ராஜ்யத்தில், ராஜாவிற்கு அடுத்தவனாக உயர்த்தப்பட்டான். தேவனாகிய கர்த்தருடைய ஆச்சரியமான உயர்ந்த வழிகளுக்கு இவர்கள் காத்திருந்தது போல, நாங்களும் காத்திருப்போம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய வழிகள் ஆச்சரியமானவைகள். நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும். இதை எப்போதும் உணர்ந்தவனா(ளா)ய், உமக்காக காத்திருக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 1:37-38