புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 01, 2018)

கர்த்தரின் ஆசீர்வாதம்

நீதிமொழிகள் 10:22

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.


மாதாந்த ஊதியத்திலே தன் குடும்பத்தை நடத்தி வந்த மனிதன், சொந்த வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தான். சொந்த வியாபாரத்தை நன்றாக முகாமைப்படுத்தி, மட்டாக உழைத்து, இன்னும் அதிகமாக குடும்பத்தோடு நேரத்தை செலவிடலாம் என்பதே அவன் பிரதானமான நோக்கமாக இருந்தது. எனினும் ஆரம்பத்தில் அதிக நேரத்தை வியாபாரத்தை விளம்பரம்படுத்துவதற் காக செலவிட்டான். அவனுடைய வியா பாரம் பிரபல்யமாயிற்று. எதிர்பார்த்த தற்கும் அதிகமாக வருவாய் கிடை த்தது. வியாபாரத்தினால் பல நட்புக் களை சம்பாதித்துக் கொண்டான். தன் வாழ்க்கைத் தரம் உயர்கின்றது என எண்ணினான். இந்த உலகில் பணம் எவ்வளவு வல்லமையுள்ளது என உண ர்ந்து கொண்ட அவன். தன்னை அறியாமலே, பணத்தின்மேல் பிரி யம் வைத்து அதை நாடினான். பல ஆண்டுகள் சென்ற பின், பணம் பெருகினது மட்டுமல்ல, பணத்தின் ஆசையால் உண்டான தீமைக ளையும் உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, பணத்தின் ஆசை எல்லாத் தீமைக்கும் வேராக இருக்கின்றது என பரிசுத்த வேதாக மத்திலே வாசிக்கின்றோம். எளிமையான வாழ்க்கை வாழும் மனித ர்கள் பலர், பணத்தின் ஆசை எல்லாத் தீமைக்கும் வேர் என்னும் வார்த்தையை கேட்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த உலகத்திலே பணத்தின் வல்லமை எவ்வளவு என்பதை அனுபவத்தில் அறியா திருக்கின்றார்கள். இதற்கு ஊழியர்களோ, விசுவாசிகளோ அல்லது வேறெந்த மனிதர்களோ விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆண்டுகள் சென்று வாழ்க்கை முறை மாறும்போது, சில வேளைகளிலே, பண ஆசையின் வலைக்குள் தங்களைத் தாங்களே சிக்க வைத்துக் கொள்கின்றார்கள். இதனால் வேண்டப்படாத விளைவுகளை தங்கள் வாழ்க்கையில் அனுமதித்து விடுகின்றார்கள். பணத்தின் ஆசை ஐசுவ ரியவான்களாக இருப்பவர்களுக்கு உண்டாகலாம் என்பது முற்றிலும் உண்மையானது அல்ல. பணத்தின் ஆசை ஏழைகளுக்கும், சாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கும் உண்டாகலாம். கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கின்றவர் எங்கள் கர்த்தரே. ஆனால் அத னோடு அவர் வேதனைகளை கூட்டமாட்டார். எனவே உங்கள் எந்த பிரயாசங்களிலும் கர்த்தரை மையமாக வைத்திருங்கள்.

ஜெபம்:

வழிகாட்டும் பரலோக தேவனே, இந்த உலகின் மாயையான பண ஆசையின் வலைக்குள் சிக்கிவிடாதபடிக்கு என் நடைகளை ஸ்திரப்படுத்தி என்னை உம்முடைய வழிகளில் நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:6-11