புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 31, 2018)

விவேகி

நீதிமொழிகள் 27:12

விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.


இயேசு சொன்னார்: நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். இப்படிப்பட்டவர்கள், சில வேளைகளிலே உலகத்தின் அளவுகோலி ன்படி, பாண்டித்தியம் பெற்ற ஞானிகள் என்று கூட அழைக்கப்ப டலாம், ஆனால் இவர்கள் தீயோரின் வலைக்குள் தங்களைத் தாங்களே சிக்கிக் கொள்ளும் பேதமையுள்ளவர் களாக இருக்கின்றார்கள். இயேசுவின் வார்த்தைகளை கேட்டு, அந்த வார்த் தைகளின்படி வாழ்கின்றவன், கன்ம லையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுடப்படு கின்றான். இப்படிப்பட்டவர்களில் சிலர், உலக அளவுகோலின்படி பேதமையுள் ளவர்கள் என்று கணிக்கப்படலாம், ஆனால் இவர்களின் மனக்கண் களை தேவன்தாமே பிரகாசமடையச் செய்திருக்கின்றார். விவேகி என அழைக்கப்படுபவன், தேவனை தன் தாபரமாக கொண்டிருக்கின்றான். தீங்கு நாளிலே அவனை, கர்த்தர் தாமே தம் கூடார மறைவில் காத்து வழிநடத்துகின்றார். தேவனுடைய வார்த்தைகளை அசட்டை செய் கின்ற பேதமையுள்ள மனிதன், தன் வாழ்வை அழிவை நோக்கியே கொண்டு செல்கின்றான். தன் மனக்கடினத்தை ஞானம் என்று எண்ணி, தான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் தேவனுடைய கிருபை என் பதை உணராமலும், உன்னதமானவரின் எச்சரிப்பை பொருட்படுத்தாம லும், ஆக்கினை அடையும்வரை தான் நினைத்த வழியிலே செல்கின் றான். பிரியமானவர்களே, கல்வி, தொழில், அந்தஸ்து போன்ற இந்த உலகத்தின் அளவுகோலின்படி நீங்கள் எந்த நிலையிலும் இருக்கலாம். பெரும் கல்விமானாக இருக்கலாம் அல்லது பாடசாலைக்கு செல் லாதவர்களாக இருக்கலாம். பெரும் தொழிலதிபராக இருக்கலாம் அல்லது சாதாரண வேலை செய்பவராக இருக்கலாம். உலக அந் தஸ்து பெருகினவராக இருக்கலாம் அல்லது எளிமையுள்ளவர்களாக இருக்கலாம். எவை எப்படியாக இருந்தாலும், நீங்கள் கர்த்தரின் வார்த்தையின்படி உங்கள் வாழ்க்கையை வாழும் போது நீங்கள் விவேகிகளாக இருக்கின்றீர்கள். இந்த பூவுலக வாழ்வு முடியும் போது, கர்த்தருடைய வீட்டில் நீடுழியாய் சுகித்திருப்பீர்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, உம்முடைய வார்த்தைகளின்படி வாழ்வதன் மேன்மையை உணரத்தக்கதான பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து என்னை உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 21:30