புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 28, 2018)

நன்றி கூறுவோம்…

சங்கீதம் 40:5

நான் அவைகளைச் (தேவனுடைய கிரியைகள்) சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.


கிரிக்கெற் விளையாட்டிலே மிகவும் ஆர்வமுள்ள ஒரு வாலிபன், ஊரிலுள்ள கழகமொன்றின் அணியிலே அங்கத்தவனாக இருந்தான். குறிப்பிட்ட சனிக்கிழமையன்று, முக்கியமான கிரிக்கெற் விளை யாட்டுப் போட்டி, சற்று தொலைவிலுள்ள இன்னுமொரு ஊரிலே இரு ந்ததனால், முன்கூட்டியே பிரயாணப்பட வேண்டும் என்று கழகத்தி னால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த குறிப்பிட்ட சனிகிழமையன்று, தன்னுடைய மகன் விளையாட்டில் கல ந்து கொள்ளாமல் வீட்டில் தரித்திரு ப்பதை கண்ட தந்தை ஆச்சரியப்பட் டார். மகனே, ஏன் நீ விளையாட்டுப் போட்டிக்கு போகவில்லை என்று கேட் டார். அதற்கு அவன்: அப்பா, இன்று உங்கள் 50வது பிறந்த தினம் உங்க ளோடு இருப்பதையே விரும்புகின் றேன் என்று கூறினான். நீ முன்பு கூறியிருந்தால், நான் உன்னோடு அடுத்த ஊருக்கு வந்திருப்பேன் என்று தந்தை கூறினார். அவனோ: அப்பா கடந்த 20 வருடங்களாக எத்தனையோ தியாகங்களை நீங்கள் எனக்கு செய்தீர்கள். இன்று நான் உங்களுக்கு நன்றி கூறும் நாள் என்று பதிலளித்தான். மகனி;ன் உவகை நிறைந்த உள்ளத்தை, தனது 50வது பிறந்த தினத்திலே, தனக்குக்கிடைத்த அரும்பெரும் பரிசு என தந்தை பரவசம் அடைந்தார். பிரியமானவர்களே, எங்கள் பரம பிதா எங்களில் எவ்வ ளவு அன்புள்ளவராக இருக்கின்றார். தன் சொந்த குமாரனையே எங் களுக்காக இந்த உலகத்திற்கு அனுப்பினார். நாங்கள் எப்போதும் அவ ரிடம் கேட்டு பெற்றுக் கொள்வதையே நாடுகின்றோம். அவர் சம்பூர ணராக இருப்பதால் அவர் கொடுப்பதிலும் சலிப்படைந்து போவதி ல்லை. தன் தந்தைக்கு தன் உவகை நிறைந்த உள்ளத்தை வெளிப்ப டுத்திய வாலிபனைப் போல, நாங்களும் எங்கள் உவகை நிறைந்த உள்ளத்தை எங்கள் பரம பிதாவிற்கு, எங்கள் மனமார்ந்த கிரியைகளி னாலே வெளிப்படுத்த வேண்டும். அந்த வாலிபன் ஒரு விளையாட் டுப் போட்டியை இழந்து போனான். ஆனால் அந்த நாளை அவன் தந்தையார் தன் உயிர்உள்ளவரை மறந்து போகமாட்டார். எண்ணற்ற நன்மைகள் செய்த தேவனுக்கு எங்கள் நன்றியை கூறுவோம்.

ஜெபம்:

அன்பான தேவனே, நீர் செய்த எண்ணிமுடியாத உபகாரங்களுக்காக, உவகை நிறைந்த உள்ளத்தோடு உமக்கு நன்றி பலிகளை செலுத்தும் உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 9:1