புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 20, 2018)

வஞ்சகம் எங்களுக்குரியதல்ல!

சங்கீதம் 19:14

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக


ஞானமுள்ள மனிதர்கள், மற்ற மனிதர்களுடன் சம்பா~pக்கும் போது, தாங்கள் பேசுவது இன்னது என்று நிதானித்தறிவதில் மிகவும் கவன முள்ளவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் பேச்சில் தவறும் போது, அதை மூடி மறைக்காமல் அல்லது நியாயப்படுத்தாமல், மனம் வருந்தி, தங்கள் பிழைகளை சரிசெய்து கொள்கின்றார்கள். ஏதேன் தோட்டத்திலே பிசாசானவன், ஏவளை அழைத்து, தேவனுடைய வார்த்தைக்கு எதிராக செயற்படும்படி அவளை வஞ் சித்தான். அன்று முதல் இன்று வரைக் கும் பிசாசானவன் மனிதர்களை வஞ்சி க்க எத்தனம் செய்து கொண்டே இரு க்கின்றான். மனிதர்களை வஞ்சிப்பது அவனுடைய குணஇயல்பு. சில மனித ர்களோ, தங்களுக்கு கிடைக்கும் சந்த ர்ப்பங்களில், பிறரின் உள்ளத்தை புண் படுத்தும்படி வஞ்சகமான வார்த்தை களை பேசிவிடுவார்கள். மற்றவர்களின் வாழ்க்கையின் சமாதானத்தை கெடுத் துப் போடும்படி வஞ்சகமான செயல்களை செய்கின்றார்கள். பின்பு அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி, நான் விளையாட்டுக்க ல்லவோ செய்தேன் என்று கூறிவிடுவார்கள். ஒருவர், உங்களை நோக்கி நெருப்புக் கொள்ளிகளையும், அம்புகளையும், சாவுக்கேது வானவைகளையும் எறிந்துவிட்டு நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று கூறினால், அந்த மனிதனின் வார்த்தையை குறித்து என்ன சொல்வீர்கள். அப்படி செய்கின்ற பைத்தியக்காரன் எப்படி யிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனு~னும் இருக்கிறான் என்று வேதத்திலே வாசிக்கின்றோம். நாங்கள் தூய் மையான வாழ்க்கைக்கென்று மகா பரிசுத்தமுள்ளவரால், பரலோக வாசிகள் ஆகும்படி அழைக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் ஆராதி க்கும் தேவனிடத்தில் எந்த வஞ்சகமும் இல்லை. எனவே எங்கள் வாயின் வார்த்தைகளும், எங்கள் இருதயத்தின் தியானங்களும், எங்கள் கிரியைகளும் எப்போதும் தேவனுக்கு பிரியமுள்ளதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, மற்றவர்களின் வாழ்க்கையின் சமாதானத்தைக் கெடுக்கும் வஞ்சகமான வார்த்தைகளை எந்த காரணத்தைக் கொண்டும் பேசாதபடிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா )க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 26:18-19