புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 19, 2018)

நித்திய வாழ்வை நோக்குவோம்

எபிரெயர் 6:11

நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடியபொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து,


சோம்பேறிகளையும், தரித்திரர்களையும் பற்றி பேசிக் கொள்ளும் போது பொதுவான மனிதர்கள் இந்த உலகத்திலுள்ள பொருளாதார பின்ன டைவுகளைப் பற்றியே சிந்தித்துக் கொள்கின்றார்கள். செய்யும் தொழி லிலே அசதியாக இருப்பவன், பொருளாதார செழிப்பை காண்பது அரிது என்பது உண்மை. பரிசுத்த வேதாகமத்திலே, லவோதிக்கேயா என்னும் சபையினர், தாங்கள் காண்ப தையும், தங்கள் அறிவையும் வைத்து, நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களென்றும், திரவியசம்பன்னர்களென்றும், எந்த ஒரு குறைவுமில்லாதவர்கள் என்றும், தங் களை எண்ணிக் கொண்டார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறி ஸ்து, அவர்களுக்கு கூறியதாவது: நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்க ப்படத்தக்கவனும், தரித்திரனும், குரு டனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறி யாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகி றபடியால்;, நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிட ப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன் றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னி டத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோ சனை சொல்லுகிறேன். பிரிமானவர்களே, இந்த உலகத்துடன் அழிந்து போகும் ஐசுவரியமும், கண்களின் பார்வையும், எங்கள் உள்ளான மனிதனின் நிலையை மறைத்துவிடக்கூடிய சாத்தியம் உண்டு. சிலர் தங்கள் வெளிப்படையான வளர்ச்சி மட்டுமே தேவ ஆசீர்வாதம் என்று, அவற்றை பற்றிக் கொண்டு நிர்விசாரம் அடைந்து, தங்கள் நித்திய வாழ்வின் வளர்ச்சியைக் குறித்து சோம்பேறியாகி விடுகின்றா ர்கள். கர்த்தரின் வருகையின் வாக்குத்தத்தத்தை உணராமல் நித்திரை செய்கின்றவர்களுக்கு ஒப்பாயிருக்கின்றார்கள். நாங்கள் செய்யும் தொழிலிலோ, ஆவிக்குரிய வாழ்விலோ அசதியாக இல்லாமல், உற்சாகத்துடன் செயற்படுவோம்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, இந்த உலகத்தின் அளவுகோலின்படி என் வாழ்க்கையை நிர்ணயிக்காமல், பரலோக ஐசுவரியத்தை குறித்த உணர்வுள்ளவனாக வாழ என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 24:30-34