புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 18, 2018)

காலத்தில் பயிர் செய்கின்றவர்கள்..

பிரசங்கி 3:2

பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;…


தன் பிழைப்புக்காக, சிறிய அளவிலே தோட்டம் செய்யும் விவசாயி ஒருவன், மிளகாய் மற்றும் கத்தரி கன்றுகளை தோட்டத்தில் நாட்டி னான். அந்த கன்றுகளை பராமரிப்பதெப்படி என்பதை, அனுபவமிக்க விவசாயிகளிடமிருந்தும், அரசாங்க ஆய்வு வெளியீடுகளிலிருந்தும் நன்றாக கற்றுக் குறிப்புக்களை எடுத்துக் கொண்டான். அந்த கன்று கள் வளர்ந்து பலன் தருவதற்கு தேவையான ஊட்டச்சத்துள்ள பச ளைகளை கொள்வனவு செய்து, அதை கொண்டு வந்து பாதுகாப்பான இடத் திலே வைத்தான். நாட்கள் கிழமைக ளாக மாறி, மாதங்கள் கடந்தபின்பும், அந்தப் பசளைகள் அவன் வீட்டில் பாதுகாப்பான இடத்தில் இருந்தது. கொள்வனவு செய்த பசளைகள் தோட் டத்தில் இன்னும் போடப்படவில்லை, கற்று கொண்ட பராமரிப்பு ஒழுங்கு முறைகள், குறிப்பெடுத்த புத்த கத்திலே அழகாக எழுதப்பட்டிருக்கின்றது. அவன் எடுத்த நல்ல குறிப் புகளால் பலன் என்ன? அவன் கொள்வனவு செய்த பசளைகளால் பலன் என்ன? பிரியமானவர்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவ னுடைய வார்த்தைகளே எங்கள் ஆத்துமாவின் போஜனம். அந்த வார் த்தைகளை நாங்கள் இரவும் பகலும் வாசித்து தியானிக்க வேண்டும். அவற்றை எங்கள் வாழ்வில் கைக் கொள்ள வேண்டும். உதாரணமாக “உன்னை பகைக்கிறவனை ஆசீர்வதிக்க வேண்டும்” என்னும் வார்த் தையை கேட்டுவிட்டு, எங்களுக்கு விரோதமாக பேசுகின்ற உறவி னருடன் சண்டைக்கு போவோமாக இருந்தால், பசளையை கொள்வ னவு செய்து, தன் தோட்டத்திற்கு போடாமலும், நாற்றுக்களை பராம ரிப்பதெப்படி என்பதை பற்றிய குறிப்புகளை கைகொள்ளாமலும் இரு க்கின்ற மதியீனமும் சோம்பலுமான விவசாயிக்கு நாம் ஒப்பாயிருப் போம். இதற்கொத்த மனிதர்களின் இருதயங்களில் முட்செடிகளும், காஞ் சொறிகளும் முளைத்து அவர்கள் இருதயங்களை மூடிக் கொள்ளும். ஆனால், கர்த்தரை நம்பி, அவர் வார்த்தைகளை தன் வாழ்க்கையில் கைக் கொள்ளுகிறவன், தன்னுடைய பரம பிதாவைப் போல தன் வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்களை அதின தின் காலத்திலே நேர்த்தியாகச் செய்கின்றான்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய வார்த்தைகளை கேட்டு, அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் புத்தியுள்ள மகனை(ளை)ப் போல நானும் வாழ, என் மனக்கண்களை திறந்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:1-14