புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 14, 2018)

அவரே எங்கள் ஆறுதல்

கலாத்தியர் 3:14

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாக வும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயி ற்று


இந்த உலகிலே மனிதர்கள் மனிதர்களை சபிப்பதுண்டு. சில வேளை களிலே, உறவினர், நண்பர்கள், உடன் சகோதரர்கள் கூட தாங்கள் நேசித்தவர்களை சபித்து விடுகின்றார்கள். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது. அந்தப்படி கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, மனிதகுலத்தின் பாவங்களை தன்மேல் ஏற்று, சிலுவை மரணத்தினாலே, எங் கள் மேல் வீழ்ந்திருந்த நித்திய மரண ஆக்கினையாகிய சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். எனவே நாங்கள் இனி சாபத்திற்கு உட்பட்டவர் கள் அல்ல. நாங்கள் கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களாக இருந்தால், எவருடைய சாபமும் எங்கள் மேல் தங்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் எங்கள் உள்ளத்தை ஆட்கொண்டுவி ட்டால், அங்கே பிசாசின் கிரியைகள் தங்குவதற்கு இடமில்லை. ஆனால் நாங்கள் மறுபடியும் சாபத்தை மனதார தேடிக்கொள்கின்றவர்களாக மாறிவி டக்கூடாது. இராட்சத பிறவியாகிய, கோலியாத்தை எதிர்த்து, இளைஞனா கிய தாவீது போருக்கு சென்றான். அந்த நேரத்திலே: கோலியாத் தாவீதை அசட்டை பண்ணினான். நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா? என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். ஆனால் அந்த சாபங்கள் ஏதும் தேவனுடைய பிள்ளையாகிய தாவீதினிடத்தில் பலிக்கவில்லை. இதைப் போலவே, இன்றும் கோலியாத்தைப் போல, இந்த பூமியிலே, செல்வத்தினாலோ, அந்தஸ்தினாலோ, அதிகாரங்களினாலோ, வேறெந்த காரியங்களினாலோ பலத்திருக்கின்றவர்கள், ஒரு வேளை எங்களை சபிக்கலாம் அல்லது தங்கள் தேவர்களின் நாமத்திலே தீவினைகளை செய்ய எத்தனிக்கலாம். அந்த வேளைகளிலே, தாவீதுக்குள் இருந்த எல்லா தேவர்களிலும் பெரிய தேவனுடைய, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கின்றார். கிறிஸ்து வழியாக நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றோம்.

ஜெபம்:

இரக்கமுள்ள பிதாவே, கிறிஸ்து வழியாக எங்களுக்கு நீர் தந்த ஆசீர்வாதத்தின் மேன்மையை உணர்ந்தவர்களாய், இந்த உலக சவால்களுக்கு பயப்படாமல் வாழ எங்களை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 26:2