புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2018)

இன்றே சிறிதாக ஆரம்பியுங்கள்

எபேசியர் 6:18

எந்தச் சமயத்திலும் சகல விதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.


“நாங்கள் இந்த விஷயத்திற்காக ஜெபிப்போம்” என்று பலர் சொல்வதை கேட்டிருக்கின்றோம். அதற்கு நாங்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல. பல காரணங்களுக்காக இதை சொல்லிக் கொள்வா ர்கள். “நான் இன்னாரைப் பற்றி இப்படி அறிந்து கொண்டேன், இதை ஜெபிப்பதற்காகவே உங்களுக்கு சொல்கின்றேன்” என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். இன்னும் சிலர், மற்றவர்களுடைய வீணான சம்பாஷனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படி, “எவை எப்படியாக இருந்தாலும் நாங்கள் ஜெபிப்போம்” என்று கூறிக் கொள்வார்கள். நாங்கள் இப்படி கூறுகின்றவர்களாக இருந்தால், உண்மையாக அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும். அப்படி உண்மையாக செய்வோமாக இருந்தால், தேவனுக்கு முன் நாங்கள் பொய்யர்களாக இருக்க மாட்டோம். ஜெபக் குறிப்பு புத்தகம் ஒன்றை எடுத்து, ஜெப விண் ணப்பங்களை எழுத ஆரம்பியுங்கள். சிறிதாக ஆரம்பியுங்கள். மற்றய மனித ர்களின் வாழ்விலும், உங்கள் வாழ்வி லும் இருக்கும் தேவைகளை, அந்த புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கள். நவீன உபகரணங்களால் விண்ணப்பங்களை பதிவு செய்வதை கூடியளவு தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் ஜெபத்திற்கு செல்லும் போது, தொலைபேசி மற்றும் இன்ரநெற் ஊடகங்கள் வழியாக வரும் அழைப்புக்கள், உங்களுக்கு இடையூறாக மாறிவிடலாம். கருப்பொருளாவது, எங்கள் பரலோக தந்தையோடு இடைப்படும் நேரத்தை மனநிறைவோடு செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த விண்ணப்பங்களுக்காக வேண்டுதல் செய்யுங்கள். பரிசுத்த வேதாகமத்திலுள்ள வாக்குத்தத்தங்களை அறிக்கையிடுங்கள். நீங்கள் குறிப்பெடுத்த விண்ணப்பங்களுக்காக தேவனை நன்றியோடு துதியுங்கள். அப்படி செய்யும் போது, உங்கள் வாழ்கையிலும், மற்ற வர்கள் வாழ்க்கையிலும் பெரிதான ஆசீர்வாதங்களைக் காண்பீர்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தேவனே, உம்முடைய சமுகத்திலே மற்றவர்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தமைக்காக ஸ்தோத்திரம். அதை மனதார செய்யும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6