புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2018)

இயேசு எங்களுக்காக மரித்தார்

மத்தேயு 5:44

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.


அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த கால த்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அது மட்டுமல்லாமல், நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம். ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலே பிறந்ததினாலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட ஒருவரின் வழி நடத்துதலினாலோ மனிதனுக்கு பாவத் திலிருந்து மீட்பு வருவதில்லை. தேவனாகிய கர்த்தர், சில மனிதர்களை உங் கள் வாழ்க்கையில் கருவிகளாக உப யோகிக்கலாம். ஆனால் தேவன் தம்முடைய அநாதி ஸ்நேகத்தினால் பகைஞராயிருந்த எங்களை நேசித்து, தம்முடைய மிகுந்த காருண்யத்தினால் தகுதியில்லாத எங்களை அணைத்துக் கொண்டார். கர்த்தராகிய இயேசு கிறி ஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகின்றவர்களாகிய நாம், அவர் செய்து காட்டியது போல, நாங்களும் எங்கள் பகைவரை நேசிக்க வேண்டும். இயேசு சொன்னார்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிற வர்களுக்கு நன்மைசெய்யுங்கள் என்றார். மற்ற எந்த பாவ இச்சைகளைப் போலவே, பகை, கசப்பு, பிரிவினை ஆகிய மாம்சத்தின் கிரியைகள் மனிதர்களை உந்தி ஏவுகின்றது. அவனை மன்னிக்காதே, விட்டுக் கொடுக்காதே என்னும் சுய பெருமையின் சத்தம் கேட்கும் போது, மேலே கூறப்பட்ட இயேசு சொன்ன வார்த்தையை அறிக்கை யிடுங்கள். நான் தேவனுக்கு பகைஞனாக இருந்தேன், இயேசு பரலோகத்தைவிட்டு என்னை தேடி தாழ்விடங்களுக்கு வந்தார். அதே போல நானும் என்னை தாழ்த்துவேன் என்று அறிக் கையிடுங்கள். தேவ ஆவியானவர்தாமே உங்களை நற்கிரியைகள் செய்யும்படி வழி நடத்திச் செல்வார்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நாங்கள் பாவிகளும், உம்முடைய பகைஞருமாயிருக்கும் போதே, நீர் உம்முடைய குமாரனாகிய இயேசு வழியான மீட்பைத் தந்தீர். உம்முடைய அன்புக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:12-16