புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2018)

இருதயத்தை அறிந்தவர்...

சங்கீதம் 139:2

என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.


ஆதியிலே, முதல் பெற்றோர் தேவனுடைய கட்டளையை மீறி, பிசா சானவனுடைய தந்திரத்திற்கு கீழ்ப்படிந்து பாவம் செய்தார்கள். தாங்கள் பாவம் செய்தோம் என்று தேவனை வேண்டிக் கொள்வதற்கு பதி லாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினார்கள். ஆதாம் தேவனை நோக்கி: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ் விருட்சத்தின் கனியை எனக்குக் கொடு த்தாள், நான் புசித்தேன் என்றான். ஸ்தி ரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித் தது, நான் புசித்தேன் என்றாள். ஆனால் தாவீது என்னும் மனிதன், அவன் இஸ் ரவேலின் ராஜாவாக இருந்து போதும், நீர் பாவம் செய்தீர் என்று தீர்க்கதரிசி யாகிய நாத்தான்வேல் கூறிய போது, தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு தேவ னுடைய பாதத்திலே சரணடைந்தான். எங்களுடைய வாழக்கையிலும் நாங்கள் எங்களை அறியாமலே, குற்றத்தை மற்றவர்கள்மேல் போட்டுவிடுகின்றோம். ஆதாம் ஏவாளுக்கு முன்கூட்டியே தேவன் தம்முடைய கட்டளையை கொடுத்திருந்தார். அதே போலவே, தாவீதும் தேவனுடைய கட்டளைகளை நன்கு அறி ந்திருந்தான். ஏவாளை சர்ப்பமாகிய சாத்தான் வஞ்சித்தது உண்மை, அது போலவே, தாவீதும் ஒரு ஸ்திரி வழியாக வஞ்சிக்கப்பட்டான். ஆதாம் ஏவாள் பாவம் செய்தோம் என்று உணர்ந்தபோதும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. தீர்க்கதரிசியானவன் தாவீதினிட த்திற்கு வருமுன், தாவீதும் தன் பாவத்தை மறைக்க துணிகரமான செயல்களை செய்தான். ஆதாம் ஏவாளிடம் தேவன் பேசினார் அதே போலவே, தாவீதிடமும் பேசினார். தாவீதோ தன் தவறுகளை உண ர்ந்து கொண்டான். நாங்களும் தேவனுடைய கட்டளைகளை நன்கு அறிந்திருக்கின்றோம். வஞ்சகமான பேச்சுகள், தந்திரமான செயல்கள் பல வழிகளில் வரலாம். முதலாவதாக அதை இனங்கண்டு, பாவம் செய்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஒரு வேளை பாவம் செய்தால், அதை மூடி மறைக்காமல், மற்றவர்களை குற்றப்படுத்தாமல், சகல மனிதர்களின் இருதயங்களையும் அறிந்த தேவனிடம், எங்ளை நாங் கள் முற்றிலும் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பும் இரக்கமுமுள்ள நல்ல தந்தையே, நான் உம்முடைய வழியை விட்டு தவறும் போது, மற்றவர்களை குற்றப்படுத்தாமல், என் தவறுகளை ஏற்றுக் கொண்டு மனந்திரும்பும் இருதயத்தைத் தாரும். இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-5