புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 30, 2018)

ராஜாதி ராஜாவின் ஊழியர்கள்

மத்தேயு 11:29

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர் கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.


ஆலயத்திலே ஆராதனை முடிந்து வெளியே சென்ற பின்பு, உலகி லுள்ள சகல அதிகாரங்களும் தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றதென்பதை மறந்து போய்விடுகின்றோம். வீட்டிலுள்ள குடும்பத் தலைவனாக இருக்கலாம், பாடசாலை அதிகாரங்களாக இருக்கலாம் அல்லது தேசங்களின் அரசாங்கங்களும் அதற்கு உட்பட்ட அதிகாரங்களாகவும் இருக்கலாம் அவை யாவும் தேவனுடைய ஆளுகைக்கு மேற்பட்டதல்ல. மனிதர்கள் தங்கள் வாழ்க்கை யில் சுயாதீனமாக சிந்தித்து முடிவெடு க்கும் ஆற்றலை தேவன் அருளியிரு க்கின்றார். அவர்கள் எடுக்கும் முடிவு கள் யாவும் தேவனுக்கு பிரியமானவைகள் அல்ல. அது போல அதிகா ரங்களை பெற்றுக் கொண்டவர்கள் எடுக்கும் முடிவுகள் யாவும்;; தேவனுக்கு பிரியமானவைகள் அல்ல. தனிப்பட எங்கள் மேல் பொறுமையாக இரு க்கும் தேவன், அதிகாரங்களை உடை யவர்கள் மேலும் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். தேவனு டைய நியமங்களை தள்ளிவிட்டு, தங்கள் இதயத்திற்கு பிரியமாக ராஜாக்களை ஏற்படுத்திக் கொண்டவர்களை வேதத்திலே காண்கின்றோம். கருப்பொருளானது, எல்லா அதிகாரத்திற்கும் மேற்பட்ட ராஜாதி ராஜா வாகிய இயேசுவின் நிலையான, அழியாத, மாசற்ற ராஜ்யத்திற் கென்று வேலை செய்யும் சிலாக்கியம் எவ்வளவு மேன்மையானது! இதன் இரகசியம் உலகத்தில் உள்ளவர்களுக்கு பைத்தியமாக தோன் றுகின்றது. ஏனெனில் அவர்கள் மெய்யான ஒளியாகிய இயேசுவை வெறுத்து, மாயையான இருளை தங்களுக்கென்று தெரிந்திருக்கி ன்றார்கள். எனவே, திடன் கொள்ளுங்கள். நீதிமான் துன்மார்க்கருக்கு முன்பாக பதறிப்போகிறவன் அல்ல. இந்த உலகிலே துன்மார்க்கர் நீதிமான்களை ஆட்சி செய்வது போல தோன்றலாம், ஆனால் மேலான அதிகாரமுடைய சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கண் கள் நீதிமான் மேல் நோக்கமாயிருக்கின்றது.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, சகல அதிகாரங்களுக்கும் மேற்பட்ட உம்முடைய கண்கள், எளிமையான எங்கள் மேல் நோக்கமாயிருப்பதற்காக நன்றி!  நீர் தந்த சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றி! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:15