புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 28, 2018)

அமைதலான மறு உத்தரவு

நீதிமொழிகள் 25:15

நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்க ப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்


இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானியராலே ஏழு வருடங்கள் மிகவும் சிறு மைப்படுத்தப்பட்டார்கள்;.  அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். அவர்களை இரட்சிக்கும்படி, கர்த்தர் மனாசே கோத்திரத்திலிருந்து, கிதியோன் என்னும் மனிதனை எழுப்பினார். கர்த்தரின் கையால் இரட்சிப்பு உண்டானது என்று இஸ்ரவேலர் அறியும் பொருட்டு, தெரிந்து கொள்ள ப்பட்ட 300 வீரர்களால், மீதியானிய ரின் பலத்த படையை கர்த்தர் தோற்க டித்தார். மீதியானியரின் படையை மேற்கொண்டு பின்பு, மிகுதியான எதி ரிகளுடன் யுத்தம் செய்யும் பொருட்டு, கிதியோன், எப்பிராயீம் கோத்திரத்தை அழைத்தான். அப்பொழுது எப்பிராயீம் மனு~ர் அவனை நோக்கி: நீ மீதியா னியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவி ல்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று அவ னோடே பலத்த வாக்குவாதம்பண்ணினார்கள். கிதியோன், அவர்க ளுடன் வாக்குவாதம் செய்யாமல் அவர்களை நோக்கி நீங்கள் செய்த தற்கு நான் செய்தது எம்மாத்திரம்?  தேவன் உங்கள் கையிலே மீதி யானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடு த்தாரே. நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலி ருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று. பிரியமானவர்களே, மெது வான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோப த்தை எழுப்பும். கிதியோன், பிரத்தியேகமாக, கர்த்தரால் அழை க்கப்பட்டிருந்தான். கர்த்தர் கற்பித்தபடியே 300 பேருடன் யுத்தத்தை ஆரம்பித்தான். அதனால் தன் சகோதரரான எப்ராயீம் மனிதர்கள் கோபம் கொண்ட போது, அவர்களை கடுஞ் சொற்களால் அடக்காத படிக்கு, அமைதலுள்ள மறுமொழியால், எப்பிராயீமின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டான். எங்கள் வாழ்க்கையிலும், நாங்கள் சரியானதை செய்யும் போது, மற்ற மனிதர்கள் எங்களுடன் வாக்குவாதம் செய் தால், எங்களின் அமைதலுள்ள பிரதியுத்தரத்தால், சண்டைகளை அடக்கிவிட வேண்டும். எங்கள் பொறுமையை காத்துக் கொண்டு, சாந்தமுள்ள ஆவியோடு பதிலளித்தால், அதிகாரிகளின் மனதைக் கூட மாற்றிவிடலாம்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே,  கலகங்கள் ஏற்படும்போது என் பொறுமையைக் காத்துக் கொள்ளவும், ஏற்ற நேரத்தில் அமைதலுள்ள ஆவியோடு, மறு உத்தரவு கொடுக்கும்படிக்கும் என்னை வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 15:1