புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 27, 2018)

மற்றவர்களை மன்னிப்பது போல...

மத்தேயு 6:12

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே, எளிமையான குடும்பத்திலே பிறந்து, பலராலும் நகைக்கப்பட்ட நாசரேத் என்னும் ஒரு சிறிய கிரா மத்திலே (யோவான் 1:46), வளர்ந்து வந்தார். ஏறக்குறைய முப்பதா வது வயதில் (லூக்கா 3:23) பிரதியட்சமாக தன் பணியை இந்த பூமியில் ஆரம்பித்தபோதும் எளிமையான வாழ்க்கை முறையையே தெரிந்து கொண்டார். இயேசுவின் சீ~ ர்களில் யூதாஸ் என்பவன் பொரு ளாதார விடயங்களை பார்த்து வந்தான் (யோவான் 13:29). ரோம அரசாங்க த்திற்கு கொடுக்க வேண்டிய வரியை இயேசு செலுத்தி வந்தார் (மத்தேயு 17:27). அநேக ஸ்திரிகள், தங்கள் ஆஸ் திகளால் இயேசுவுக்கு ஊழியம் செய்து வந்தார்கள் (லூக்கா 8:3). இயேசுவி டம் உலகத்தின் ஐசுவரியமோ, பொருட்களோ மிகையாக இருக்கவில்லை. ஆனால் இயேசுவோ தன்னிடத்திலிருந்த மேன்மையானவைகளை தன்னிடம் வந்த யாவ ருக்கும் கொடுத்தார். சிலுவை மரணபரியந்தம் வரை தன்னை முழு மையாக கொடுத்தார். தன் உயிரையே தியாக பலியாக கொடுத்தார்! பணத்தினாலும் பொருளினாலும் பெற்றுக் கொள்ளமுடியாத மன்னிப்பை கொடுத்தார். துன்புறுத்தப்பட்ட வேளைகளில் மௌனமாக இருந்தார். தனக்கு அநியாயம் செய்தவர்களுக்கு நன்மை செய்தார். இந்த உலகம் கொடுக்க முடியாத நிம்மதியை கொடுத்தார். ஆகாத வர்கள் என்று தள்ளிவிடப்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்தார்.  சில வேளைகளிலே நாங்கள் பணம் பொருட்களை கொடுத்து உதவ ஆயத்தமாக இருப்போம். அத்தோடு நின்றுவிடாமல், கர்த்தர் செய்யாத மேலான கிரியைகளை நாங்களும் செய்ய வேண்டும்.  மற்றவர்கள் எங்களுக்கு எதிராக செய்யும் குற்றத்தை மன்னித்து விடுவது மேலான காரியம். சில வேளைகளிலே மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு எங்களிடம் பணமோ பொருளோ இல்லாதிருக்கலாம். ஆனால் எங்களிடம் இருக்கும் பரிசுத்தாவியின் நற்கனிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க முடியும். எவ்வளவுக்கு அதிகமாக மற்றவர்களுக்கு மன்னிப்பை கொடுக்கின்றோமோ, அது போலவே தேவனும் எங்கள் தப்பிதங்களை மன்னித்துவிடுகின்றார்.

ஜெபம்:

உன்னதமாக தேவனே, பணத்தினாலோ பொருளினாலோ பெற்றுக் கொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை நான் மற்றவர்களுக்கு தாராளமாக வழங்கும்படியாய் என்னை உணர்வுள்ளவனாக்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - லூக்கா 6:36