புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 26, 2018)

மேன்மையான கிரியைகள்

லூக்கா 12:33

பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத் தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித் துவையுங்கள்,


பொதுவாக மனிதர்கள் யாவரும், பொருளாதார ரீதியிலே முன் னேற்றும் காணும் போது மகிழ்ச்சியடைவார்கள். இந்த பூமியில் வாழும் நாட்களில் க~;டங்கள் தீர்ந்து, வசதியாக வாழ வேண்டும் என்று தேவனை பிரார்த்திக்கின்றார்கள். பழைய சைக்கிள் ஒன்றை வைத்திருப்பான், புதிய சைக்கிள் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவான். இப்படியாக வாழ்க் கையிலே முன்னேற்றம் அடையும்படி பலர் நேர்மையாக பிரயாசப்படுகின்றா ர்கள். அந்த பிரயாசத்தின் பலன்களை அடையும் போது, அதிகதிகமாக தரித் திரர்களை ஆதரியுங்கள். கடன் தொல் லைகளிலும், அடுத்த வேளை ஆகார த்தை குறித்த நம்பிக்கை அற்றவர்க ளாயும், மழைக்கும் வெய்யிலுக்கும் ஒதுங்க தகுந்த இடமில்லாமலும் வாடி டும் வறியோர் பலர். அடுத்த மாதம் அல்லது அடுத்த வருடம் உதவுவோம் என்று பின்போடாதிருங்கள். இயேசு சொன்னார்: உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கி~த்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறது மில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.  உங்கள் பொக்கி~ம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,  தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனு~ருக்கு ஒப்பாகவும் இருங்கள். கைமாறு பெறும்படி, உள்ளவ ர்களுக்கு கொடுப்பதில் பலன் என்ன? திரும்ப கொடுக்க வழியில்லாத வர்களுக்கு உதவி செய்யுங்கள். பணத்தை கையாள முகாமைத்துவ மில்லாதவர்கள் அல்லது உதவியை து~;பிரயோகம் செய்வார்கள் என்று கூறி எங்கள் இருதயத்தை கடினப்படுத்தக் கூடாது. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. கர்த்தர் எங்களுக்கு கொடுத்த யாவற்றையும் நாங்கள் செம்மையாக கையாளவில்லை என்று, அவர் எங்களுக்கு அனுக்கிரகம் செய்வதை நிறுத்திவிட்டால் எங்கள் நிலை என்னாவது? நாங்கள் நிர்மூலமாகாதிருப்பது தேவனுடைய கிருபை.

ஜெபம்:

இரக்கமுள்ள பிதாவே,  பல கஷ்டங்கள் இன்னல்கள் மத்தியில் நாடோறும் வாடும் ஏழைகளுக்கு உதவுவதன் மேன்மையை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை எனக்கு தந்து வழிநட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 2:44-45