புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2018)

தாமதியாமல் தீவிரிப்போம்

சங்கீதம் 119:59-60

என் வழிகளைச் சிந்தித் துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். உமது கற்ப னைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.


பல ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்து போன தனது நட்பைக் குறித்து, ஒரு மனிதன், ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். சில தசாப்தங்களின் பின், அதன் அடிப்படைக் காரணம் சுய நீதி என்பதை உணர்ந்து கொண்டான். தேவ பக்தியுள்ளவர்கள் என்று கூறும் பலர், தங்கள் பக்தியை வெளிக்காட்டும்படி பல விடயங்களை செய்து கொள்கின்றார்கள். ஆலயம் செல்கின் றார்கள், வேதத்தை வாசிக்கின்றார் கள், ஜெபம் செய்கின்றார்கள், தான தர்மங்களை செய்கின்றார்கள். இவை யாவும் நன்மையானவைகளே! எனினும், சில வேளைகளிலே உடன் சகோதரனுடனோ அல்லது நண்பர்கள், அயலவனுடனோ கருத்து முரண்பாடு கள் ஏற்படும் போது, தாங்கள் யார் என்பதையும், தாங்கள் கற்றுக் கொண்ட தேவ காரியங்களையும் கண ப்பொழுது மறந்து போய்விடுகின்றார் கள். இதனால் உறவுகளுக்கிடையே பிரிவினைகள் ஏற்ப்பட்டு விடுகின்றது. சிறிய கருத்து முரண்பாடுகள், அற்பமான வைராக்கியங்களால் சில திருமண ஒப்பந்தங்கள் கூட காரணமில்லாமலே உடைந்து போய்விடுகின்றது. பல வருடங்களுக்கு பின், “நான் ஏன் இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண் டேன்” என்று வேதனைப்படுவார்கள். எங்களை எதிர்நோக்கி வரும் ஒவ்வொரு சவாலுக்கும் பரிசுத்த வேதாகமத்திலே விடை உண்டு. ஆனால் மனிதர்கள் சற்று தரித்திருந்து, தங்கள் சூழ்நிலையையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும் வேத வாக்கியங்களோடு ஆராய்ந்து பார்க்கும் பொறுமையற்றவர்களாக, தீவிரமாக தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, நாங்கள் எடுக்கும் சில முடிவுகள் எங்களை மட்டுமல்ல, பலரை பாதிக்கும். சில வேளைகளிலே எங்களினால் தேவனுடைய நாமம், கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியிலும் தூ~pக்கப்படும். எனவே, சற்று தரித்திருந்து, தேவ சமுகத்திலே எங்கள் எண்ணங்களை ஆராய்ந்து, வேத வார்த்தைகளின்படி தீர்மானங்களை எடுத்து, தாமதியாமல் சீக்கிரமாய் தேவன் அண்டை சேருவோம்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, எந்தச் சூழ்நிலையிலும், மனதிலே தோன்றும் உணர்வுகளின்படி தீர்மானங்களை எடுக்காதபடி, தாமதியாமல் உம்மிடத்தில் ஒப்படைக்கும்படியாக என்னை வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - புலம்பல் 3:40