புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 21, 2018)

தீமையினின்று காக்கும் இயேசு

யோவான் 17:15

நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.


நீங்கள் சூழ்நிலைகளை கண்டு அஞ்சாதவர்கள் என்று எப்படி உறுதி செய்து கொள்வீர்கள்? எதிரிடையான சூழ்நிலைகள் உங்கள் வாழ் க்கைப் படகில் மோதும் போது, நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் வனாந்திரத்தின் வழியாக பயணம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த வனாந் திரத்தின் வழியாக பயணத்தை ஆரம் பிக்கும் போது, உங்கள் எதிர்பார்ப்பு என்ன? புயல் அடிக்கக்கூடாது. தென் றல் காற்று இதமாக வீசவேண்டும். அதிக வெப்பமோ, மிகையான குளிரோ இருக்கக்கூடாது. செல்லும் பாதை கரடுமுரடாக இல்லாமல் செப்ப னிடப்பட்டிருக்க வேண்டும். பயங்க ரமான மிருகங்கள், ஊர்வன போன் றவை எதிர்ப்படக்கூடாது. காண்கின்ற மனிதர்கள் எல்லோரும் நண்பர்களா கவே இருக்க வேண்டும். இப்படி ப்பட்ட பட்டியலின்படி உங்கள் பய ணம் அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தால் பல ஏமாற்றங்களை அடைவீர்கள். நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக் கிறோம். அப்படிப்பட்ட தீமை நிறைந்த வனாந்தரமாகிய உலகிலே கொஞ்சக் காலம் தரித்திருக்கின்றோம். பொல்லாங்கனாகிய பிசாசா னவன் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான். அந்த தந்திரங்கள் யாவையும் மேற்கொண்டு, முற்றிலும் ஜெயங் கொண்ட இயேசுவை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளும் போது, அவர்தாமே, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் எங்களுடனே கூட இருந்து, எங்களை சகல பொல்லாப்பிற்கும் விடுதலையாக்கி, இந்த உலகம் தரமுடியாத சமாதானத்தை தருவார். இயேசுதாமே எங்களை தீமையினின்று விடுவிக்கும்படியாகவே, பிதாவாகிய தேவனிடம் வேண்டிக் கொண்டார். எனவே சூழ்நிலைகள் எப்போதும் உங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்காமல், உங்களில் இருக்கும் இயேசுவே எல்லாவற்றிலும் பெரியவர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

ஜெபம்:

பரலோக தந்தையே,  இந்த உலகத்திலுள்ள சவால்களை கண்டு அஞ்சாமல், எங்களோடு கூட இருக்கும் இயேசுவைப் பார்த்துப் பெலம் கொண்டவர்களாய் முன்னேற வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:19