புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2018)

இயேசுவின் நாமத்தில் ஜெபம்

கொலோ 1:15-16

அவர் அதரிசனமான  தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்ப ட்டது;


ஏன் நாங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும்? பிதாவாகிய தேவனின் ஏக சுதனாகிய இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமை யின் ரூபமெடுத்து, மனு~ர் சாயலானார். அவர் மனு~ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரி யந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார். ஆதலால் பிதா வாகிய தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயே சுவின் நாமத்தில் வானோர் பூதலத் தோர் பூமியின் கீழானோருடைய முழங் கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதா வாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாம த்தை அவருக்குத் தந்தருளினார் என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கிறோம். மேலும், இயேசு தம்முடைய சீ~ரை நோக்கி: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். மேலும் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்றும் கூறினார். அவர்தாமே, மனித குலத்திற்கும் பரலோகத்திற்கும் இடையில் இருந்த தடையை சிலுவையினால் கொன்று, அவர் மூலமாய் பிதாவாகிய தேவனிடத்தில் சேரும் சிலாக்கியத்தை உண்டு பண்ணினார். அவர் பரலோகத்திற்கு ஏறிச் சென்றபின்பு, எங்களோடு என்றென்றும் இருக்கும்படி, அவருடைய நாமத்தின் வழியாக, பரிசுத்த ஆவியானவரை அனுப்பும்படி பிதாவை வேண்டிக் கொண்டார்.  பிதாவின் வலது பாரிசத்தில் இருந்து எவ்வேளையும் எங்களுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கின்றார். அவர்தாமே நாங்கள் பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்யும் ஒரே வழியுமாயுமாயிருக்கிறார்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய ஏக சுதனாகிய இயேசு கிறி ஸ்து வழியாக உம்மிடம் சேரும்படியான சிலாக்கியத்தை எங்களுக்கு கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.  இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:38