புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 15, 2018)

கர்த்தர் துணையாக இருக்கின்றார்

நீதிமொழிகள் 24:17

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.


துஷ்டர்கள், நீதிமான் தங்குமிடத்திற்கு கேடு செய்யும்படியாய் பதிவி ருக்கின்றார்கள். ஆனால், பரிசுத்த வேதாகமத்திலே, நீதிமானுக்கு துன்பம் விளைவிக்க காத்திருப்பவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டிரு க்கின்றது. முன்னறிவித்தபடி, நீதிபரராகிய கர்த்தராகிய இயேசு கிறி ஸ்து, ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட மேகங்க ளிலே வருவார். அந்த எச்சரிப்பை மீறி, துஷ்டர்கள், நீதிமானுக்கு கேடு விளைவித்தாலும், நீதிமான் இடறிப்போவதில்லை. ஏனெனில், நீதிமானுக்கு பல துன்பங்கள் ஏற்பட்டாலும், அந்த துன்பங்கள் மத்தியிலும், அவன் கர்த்தரையே நம்பி இருப்பதால், கர்த்தர்தாமே, அவனுடைய விசுவாசக் கண் களைத் திறந்து விடுகின்றார். அந்த விசு வாசக் கண்களால், நீதிமான், இனி வர இருக்கும் பலன்களை தரிசிப்பதால், அவன் கர்த்தருக்குள் புது பெலன் அடை க்கின்றான். நீதிமான்களுடைய இரட்சி ப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடை க்கலம். யோபு என்னும் பக்தன், உத்தமனும் சன்மார்க்கனும் தேவ னுக்கு பயப்படுகின்ற மனுஷனுமாயிருந்தான். அவனுக்கிருந்த உலக செல்வங்கள் யாவும் அவனைவிட்டு எடுக்கப்பட்டது. பிள்ளைகளை இழந்து, உலகிலே ஆதரவற்றவனாக தனித்து விடப்பட்டான். அவன் மனைவியும் அவனுக்கு ஆதரவற்றவளானாள். சரீரம் முழுவதும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான். அந்த கொடிய சூழ்நிலை மத்தியிலும்;, அவன் தேவனை நம்பி இருந்ததால், தன் விசுவாசத்தை தளரவிடாமல், தன் முடிவை குறித்து நிச்சயமுள்ளவனாக இருந் தான். கர்த்தர் மறுபடியும் அவனை உயர்த்தினார். யோசேப்பு என்ற வாலி பனுக்கு வந்த துன்பங்கள் அநேகம். அவை யாவற்றின் மத்தியிலும் அவன் உண்மையுள்ளவனாக இருந்தான். கர்த்தர் அவனை உயர்த்தி னார். ஆம்! நீதிமான் அசைக்கப்படுவதில்லை! அவன் விழுந்து போக மாட்டான். அப்படி அவன் விழுந்து போக நேரிட்டாலும், அவனை கர்த்தர் மறுபடியும் எழுப்புவார்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, உம்முடைய கிருபையினாலே எங்களை நீதிமானாக்கினீர். நான் எப்போதும் உம்மையே நம்பி, உம்முடைய பிரமாணங்களின்படி உத்தமமாய் வாழ என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:15-20