புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2018)

என் நிலையை அறிந்தவர்

எபிரெயர் 4:15

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்,  எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.


ஒரு மனிதன், வாகன ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை பெறும் படியாய் பயிற்சி எடுத்து வந்தான். “எப்படியாவது, வாகன நடை முறை வீதிப் பரீட்சையில் சித்தி பெற்றால் போதும், அதன் பின்னர் வாகனத்தை எப்படி சரியாக ஓட்டுவது என்பதை பார்ப்போம்” என்று தன் நண்பனிடம் கூறினான். எங்கள் வாழ்க்கையிலே பல கட்டங்க ளிலே இப்படியான மனிதர்களை சந்தி த்திருக்கின்றோம். சில வேளைகளிலே நாங்களும் இப்படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றோம். சில வேளை களிலே இப்படிப்பட்ட கொள்கைகளை இந்த உலகத்திலே, பல மனிதர்கள் அல் லது ஸ்தாபனங்கள் ஏற்றுக் கொள் ளலாம். கிறிஸ்தவ வாழ்க்கையை, எப்ப டியாவது ஒரு கட்டத்தை சமாளித்து விடுவோம் பின்பு அதன் முக்கியத்து வத்தை குறித்து அலசி ஆராய்வோம் என்று வாழ முடியாது. உதாரணமாக, என் மகளுக்கு திருமணமாக வேண் டும், அதை ஒப்பேற்றி முடிக்கும் பொரு ட்டு இப்போது ஞானஸ்நானத்தை எடு த்து விடுவோம், திருமணத்தின் பின் னர் அதைப் பற்றி யோசிப்போம் என்பது ஏற்புடையதல்ல. இப்படி யாக பலவிதமான சூழ்நிலைகளுக்கு மனிதர்கள் தள்ளப்படுகின்றா ர்கள். எந்த ஒரு மனிதனும் எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், தன்னை தாழ்த்தி இயேசு அண்டை வருபவனாக இருந்தால், அவர் தாமே நாங்கள் நடக்க வேண்டிய வழியை, அல்லது எடுக்க வேண் டிய முடிவை எங்களுக்கு சொல்லித்தருவார். அவர் எங்கள் சோதனை களை அறியமுடியாதவர் அல்ல, எல்லா விதத்திலும் எங்கள் சூழ் நிலைகளை கடந்து, பாவம் செய்யாமல், வெற்றி பெற்ற கிருபை நிறைந்த இயேசு எங்கள் பட்சத்தில் இருக்கின்றார். எனவே எங்களை நோக்கி வரும் எந்த சூழ்நிலைகளையும் கண்டு தயங்காமல், எங்கள் நிலையை அறிந்து இயேசுவிடம் சேருவோம். தம்மண்டை வந்த எவரையும் அவர் புற ம்பே தள்ளிவிடமாட்டார்.

ஜெபம்:

இரக்கம் நிறைந்த பிதாவே, என்னை நோக்கி வரும் சூழ்நி லையை தவிர்த்து கொள்ள குறுக்கு வழிகளை நாடாமல், தயங்காமல் உம்மண்டை கிட்டிச் சேரும்படியாய் நீர் தந்த சிலாக்கியத்திற்காக ஸ்தோத்திரம். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28