புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 13, 2018)

நாட்களை ஆதாயப்படுத்துவோம்

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவை களானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது. நில த்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது. அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது என்று நீதிமொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். சோபேறித் தனமாக வாழ்பவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் இருந் தாலும், பல அருமையான சந்தர்ப்பங்கள் அவர்கள் வாசற்படிமட்டும் வந்தாலும், அவற்றை பிரயோஜனப்ப டுத்தாதபடிக்கு, தங்கள் சொந்த விவ காரங்களை தாங்கள் கவனியாமல், இருப்பதை நியாயப்படுத்த சாட்டுப் போக்குகளை சொல்லிக் கொள்வார் கள். வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான். வழியிலே சிங்கம் இரு க்கும், நடு வீதியிலே சிங்கம் இருக் கும் என்றும் சோம்பேறி சொல்லுவான். இதற்கொத்ததாகவே சிலர் நித்திய வாழ்வைக் குறித்து அசதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள். தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வதற்கு தங்கள் இருதயத்தை ஒப்புக் கொடுக்காமலும், அதற்கென்று எந்த முயற்சியும் செய்யாமல், பல சாட்டுப் போக்குகளை கூறிக் கொள்வார்கள். மதியீனரோ, தேவன் இல்லை என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொள்வார் கள். இவர்கள் தங்கள் ஆத்துமாவுக்குரிய ஆகாரமாகிய தேவ வார்த் தைகளை வெறுத்து, தாங்கள் சுகபோகமாக வாழலாம் என்று, தங்கள்  அறிவுக்கெட்டியபடி, அழிந்து போகும் உலக ஆஸ்திகளில் கண்களை பதித்து, அவற்றிற்காக பிரயாசப்படுகின்றார்கள். சோம்பேறித் தனமாக வாழ்பவர்களும், மதீயீனமாக நடந்து கொள்கின்றவர்களும், வாழ்வு தரும் தேவ வார்த்தைகள் தங்கள் இருதயத்தில் முளைத்து பலன் கொடுப்பதற்குரிய சூழ்நிலைகள் அமைய இடம் கொடுப்பதில்லை. இதனால் இவர்களுடைய இருதயம் உணர்வற்றுப் போய்விடுகின்றது. எனவே நாங்களும் அவர்களைப் போல தூங்குகின்றவர்களாகவும், மதியற்றவர்களாகவும் வாழ்ந்து காலத்தை வீணிலே போக்கடிக்காமல், உற்சாகத்துடன் ஞானமுள்ள பிள்ளைகளைப் போல, கர்த்தரை கிட்டிச் சேருவோம். காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.      

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, அசதியாய் வாழ்ந்து, நீர் தந்த இந்த வாழ்வை வீணிலே போக்கடிக்காமல்,  உற்சாக மனதுடன்,  உம்முடைய வார்த்தையின்படி நான் வாழும்படியாக என்னை உணர்வுள்ளவனா(ளா) க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 20:4