புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2018)

நற்பண்புகளை காண்பிப்போம்

பிலேமோன் 1:14

ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.


வீட்டிலே, மாதாந்தம் செய்யப்பட வேண்டிய வேலைகளை முடிப்பத ற்காக, தந்தையார், தன்னுடைய மகனிடம் “மகனே, இந்த வேலையை செய்வதற்கு எனக்கு உதவ முடியுமா” என தயவாக கேட்டுக் கொள் வார். தந்தையின் வேண்டுகோளிற்கு இணங்க, மகனும், இல்லை என்று சொல்லாமல் அதை செய்து வந்தான். பல மாதங்கள் சென்ற பின், மகனின் உள்ளத்திலே ஒரு குற்ற உணர்வு. இது எங்களுடைய வீடு ஆனால் என் தந்தை மாதந்தம், இந்த வேலையை செய்ய உதவும்படி தயவாக கேட்டு ஞாபகப்படுத்துகின் றாரே, இனிமேல் தந்தை கேட்க முன் னதாகவே. நான் அந்த வேலையை செய்யப் போகின்றேன் எனத் தீர்மானி த்தான். அடுத்த மாதத்தில், தான் கேட்க முன்னதாகவே, அந்த வேலையை தன் மகன் முடித்துவிட்டான் என்று கண்ட தந்தைக்கு பேரானந்தம். தன் மகனின் ஆளுமையின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தான். பிரியமானவர் களே, இதே போலவே எங்கள் பரம பிதாவும், தேவனுடைய ராஜ்யத்தின் வேலைகள் அநேகம் இருந்தும், அதை அவர் எங்களிடம் திணிப்பதி ல்லை. எங்கள் தீர்மானத்தின்படி செய்யும்படிக்கே அவர் விரும்புகின் றார். தேவ ராஜ்யத்தின் வேலை என்று கூறும் போது சுவிசே~ம் அறி விப்பதை மட்டுமே மனதில் கொள்ளக் கூடாது. தேவனை ஆராதிக்கும் ஸ்தலத்திலும், ஊழிய த்திலும் பல வேலைகள் செய்யப்பட வேண்டி யதாயிருக்கின்றது. அவற்றை உற்சாகத்துடன் செய்ய வேண்டும். தேவ ஊழியரான பவுல், ஒநேசிமு என்பவரை மன்னிக்கும்படியாக, பிலேமோனிடம் பரிந்து பேசினார். தான் கேட்பதினால், கட்டாயத்தின் நிமித்தம் ஒநேசிமுவை மன்னித்து ஏற்றுக் கொள்ளாமல்,  மனப்பூர் வமாக செய்யும் படி வேண்டிக் கொண்டார். அதே போலவே, நாங்க ளும் தேவனுடைய ராஜ்யத்தின் புத்திரர்கள் என்று உணர்ந்தவர்க ளாய், மற்றவர்களுடைய உந்துதலினால் அல்ல,  கட்டாயத்தினா லுமல்ல மனப்பூர்வமாய் கிரியைகளை நடப்பிக்க வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நாங்கள் உமக்கென்று செய்யும் செயல்களை முறுமுறுப்பில்லாமலும்,  கட்டாயத்தினாலும் அல்லாம லும், மனப்பூர்வமாக செய்து முடிக்கும்படி உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:3