புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2018)

கொடுப்பதே மேன்மையானது

1 கொரிந்தியர் 13:7

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.


ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, சீ~ர்கள் பெருகினபோது, அவர்களுடைய நாளாந்த தேவைகளை விசாரிக்கும்படி; பரிசுத்த ஆவி யும் ஞானமும் நிறைந்த, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை,  அவ் வேலைக்காக ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவனாக ஸ்தேவான் ஏற்படுத்தப்பட்டான். ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினா லும் நிறைந்தவனாய் ஜனங்களுக்கு ள்ளே பெரிய  அற்புதங்களையும் அடை யாளங்களையும் செய்தான். இதனால் பொறாமை கொண்ட யூத மதத்தின் ஆலோசனைச் சங்கம், அவனை கல் லெறிந்து கொலை செய்தார்கள். ஸ்தே வான் தன்னை தேவனுக்கென்று ஒப் புக் கொடுத்ததால், தேவ அன்பு அவனு க்குள் வாசமாயிருந்தது. தேவன் சம்பூ ரணமாய் கொடுக்கின்றவர் என்று அறி ந்திருந்தும், அவன் தேவனிடத்திலிருந்து இந்த உலக பொருட்க ளையும், சுகபோகமான வாழ்வையும் கேட்காமல், தன்னை முழுவது மாய் தேவனுக்கு ஓப்புக் கொடுத்தான். அவன் மரிக்கின்ற வேளை யிலும், தன்னை கல்லெறிகின்றவர்களை, சபிக்காமல், ஆண்டவரே, இவ ர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட் டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். பிரியமான வர்களே, தேவ அன்பு உங்களில் வாசமாயிருப்பதாக. பொதுவாக, மனி தர்கள், இந்த உலகத்திலே பல நன்மைகளை பெற்றுக் கொள்ளு ம்படியாகவே தேவனை வேண்டிக் கொள்கின்றார்கள். தேவ அன்பு என்பது, பெற்றுக் கொள்ளுதல் அல்ல, கொடுப்பதே! தானதர்மங்கள் செய்வது நல்லது! ஆனால், தன் இருதயத்தை தேவனுடைய சித்தம் செய்வதற்கு முழுமையாக ஒப்புக் கொடுப்பதே தேவ அன்பு. இந்த அன்பு, தேவனுக்காக சகலத்தையும் தாங்கும், சகலத் தையும் சகி க்கும், தேவனுடைய வார்த்தைகளை நம்பி, விசுவாசத்தின் கிரியை களை நடப்பிக்கும். தேவனுக்காக உங்கள் உடன் சகோதரர் செய்யும் தப்பிதங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கின்றீர்களா? சற்று உங்கள் வாழ்க்கையை இன்று சிந்தித்துப் பாருங்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, எப்போதும் பெற்றுக் கொள்வதையும், என் னுடைய விவகாரங்களின் நிறைவைப் பற்றிய கிரியைகளை நடப்பிக்கா லும், உள்ளத்தை உமக்கு கொடுக்கும் அன்பு என்னில் பெருகும்படி என் னை  வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவா 2:7-11