புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 09, 2018)

படு குழியிலிருந்து விடுதலை

நீதிமொழிகள் 23:26

என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.


எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடு ள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? என்றும் உங்கள் பொக்கி~ம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இரு க்கும். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளி வாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின் றோம். போகும் வழியில் எங்களுடைய கால்கள் பிசாசின் கண்ணிக்குள் இட றாதபடிக்கும், பாதையிலுள்ள தீயோ னின் பயங்கரங்களுக்கு தப்பும்படிக் கும் தேவனுடைய வசனமே தீபமாயும் வெளிச்சமாயுமிருக்கின்றது. இந்த உல கத்திலே வெற்றி வாழ்க்கை வாழும்ப டிக்கு எங்கள் பார்வையும், சிந்தையும் தேவன் காட்டும் வழியில் இரு க்க வேண்டும். அதனால்தான் நாங்கள் எங்கள் இருதயத்தை கர்த்தரு க்கு  ஒப்புவித்து அவருடைய வழிகளை நோக்க வேண்டும். மோக பாவமானது, ஆழமான படுகுழியும், இடுக்கமான கிணறும் என்றும் வேதத்திலே வாசிக்கின்றோம். விபசாரிகளினிடத்தில் பிரவேசிப்பவர்க ளும், மோக பாவ வலைக்குள் விழுந்து போகின்றவர்களும், அதிலி ருந்து மீட்பு பெற்றிருந்தால், அது தேவனுடைய பெரிதான கிருபை. ஏனெனில், இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து மீட்படைவது மிகவும் கடினமானது என்பதால் தான், குறிப்பாக இந்த மோக பாவத்தை ஆழ மான படுகுழிக்கும், இடுக்கமான கிணற்றிற்கும் ஒப்பிடப்பட்டிரு க்கின்றது. எனவே எங்கள் கண்களை எப்போதும் கர்த்தர் மேல் பதிய வைப்போம். சூழ்நிலைகளை சரியான முறையில் பார்ப்பதற்கு தேவனு டைய ஜீவ வார்த்தைகளே எங்களுக்கு  வெளிச்சம் தருக்கின்றது. அந்த வார்த்தைகளினால் எங்கள் இருதயங்களை எல்லாக் காவ லோடும் காத்துக் கொள்ளும் போது, அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, என் கண்கள் உம்முடைய வழிகளில் நோக்கமாயிருக்கவும்;, என் இருதயம் எப்போதும் பரிசுத்தமாக காக்கப்படவும்,  என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கி,  உம் கிருபையினால் வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 17:7-8

Category Tags: