புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2018)

கர்த்தரின் வேளைக்கு காத்திரு

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.


தங்கள் வீடு, குடும்பம், பங்கு, சுதந்திரம் என்பவைகளை பாதுகா ப்பதற்காக மனிதர்கள் துரிதமாக செயற்படுவதுண்டு. இந்த உலகிலே மனிதர்கள் பலவிதமாக யுக்திகளை கையாளுகின்றார்கள். சில வேளைகளிலே அவை வன்முறையாகவும் மாறிவிடுகின்றது. எடுத்துக் காட்டாக, குடும்பத் தலைவன் தன்னைக் குறித்த முறையீடுகளை, ஒரு வேளை ஏற்றுக் கொண்டு, நிதானமாய் பதில் கூறலாம். ஆனால், தன்னுடைய உடன் குடும்ப அங்கத்தி னரை குறித்த, முறையீடுகளை கேட் கும் மாத்திரத்திலே அதை எப்படியா வது தடை செய்யும் வழிகளை துரித மாக செய்ய முயற்சிப்பார்கள். இது மனிதர்களுடைய இயற்கை சுபாவம். ஆனால் நாங்கள் இயற்கை சுபாவத் தின்படி செயற்படுகின்றவர்கள் அல்ல. தெய்வீக சுபாவத்தின்படி செயற்படுகி ன்றவர்கள். சில வேளைகளிலே, நாங் கள் அதிகமாக நேசிப்பவர்களை குறி த்து, மற்றவர்கள் முறைப்பாட்டை கூறலாம். அந்த முறைப்பாடு உண்மையானதாகவோ அல்லது பொய்யானதாகவோ இருக்கலாம். அந்த முறைப்பாடு, சரியான மனநிலையோடு ஆக்கபூர்வமான முறை யில் கூறப்பட்டதாகவோ அல்லது வஞ்சகத்தோடு, வாழ்வை கெடுக்கு ம்படி கூறப்பட்டதாகவோ இருக்கலாம். எப்படியாக இருந்தாலும், காரியத்தை கேட்கும் முன் துரிதமாக பதிலடி கொடுக்காமல், சற்று தரித்திருந்து சிந்தியுங்கள். உங்கள் உள்ளத்தில் தோன்றும் உணர் வுகள் உங்களை ஆண்டு கொள்ளாதபடிக்கு, தேவ ஆவியானவர் ஆளுகை செய்யும்படி இடங்கொடுங்கள். கற்ற வேத வார்த்தைகள், கேட்ட தேவ செய்திகளை தியானியுங்கள். நீங்கள் நீதிமானாக இருந் தால், ‘கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு. காரியசி த்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனு~ன்மேலும் எரிச்ச லாகாதே. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லா ப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.’ உங்கள் வாழ்வில் சீர்ப்படுத்த வேண்டிய காரியங்கள் இருந்தால், அவற்றை சீர்ப்படுத்தி, தேவனுடைய நீதி வெளிப்படத் தக்கதாக, அவருடைய நேரத்திற்காக பொறுமையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, கோபங்கொண்டு துரிதமாக செயற்பட்டு, சுயநீதியை நிறைவேற்றாமல், உம்முடைய நீதி நிறைவேறும்படியாக பொறுமையோடு காத்திருக்க என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:19-20