புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 07, 2018)

ஆபத்து நாட்களில்...

நீதிமொழிகள் 24:10

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால்,உன் பெலன் குறுகினது.


இந்த பூமியிலே வாழும் மனிதர்கள் யாவரும், தங்கள் வாழ் நாட்களில், ஏதோ ஒரு சூழ்நிலையில் ஆபத்தை சந்தித்திருக்கின் றார்கள். எவரும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. சிலவே ளைகளிலே, குறிப்பிட்ட ஒரு நபர் எங்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டால் மிகவும் பரபரப்பும் சுவாரசியமுமாக இருக்கும் என்று நாங்கள் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் அப்படியாக உற்சாக மும், மனஎழுச்சியும் உள்ளவர்கள் என்று தங்களை காண்பிப்பவர்கள் கூட ஆபத்து நாளிலே அசந்து போய்விடுகின்றார்கள். ஆபத்து எங் களை சூழ்ந்து கொள்ளும் போது, எப்படிப்பட்ட மனநிலை உடையவர்க ளாக இருக்கின்றோம் என்று எங்களை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண் டும். ஆபத்து நாளிலே பதற்றம் அடை ந்து சோர்ந்து போவோமாக இருந் தால், நாங்கள் எங்கள் விசுவாசத்தில் பெலனற்றவர்களாய் இருப்போம்.  இப் படியான வேளைகளிலே, எங்கள் மனதிலே, சோதனையாய் பல கேள்விகள் எழுகின்றன. ஏன் இப்படி நடக்க வேண்டும்? நான் ஏதா வது பாவம் செய்தேனா? தேவன் எங்களோடு இருக்கின்றாரா?  சுபை யார் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இப்படி யான சிந்தனைகள் எழும்போது, நாங்கள் என்ன நினைக் கின்றோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படியானால் யார் ஆப த்துக் காலத்தில் பதறாமல் இருப்பார்கள்? உன்னதமான தேவனுக்கு மனதார ஸ்தோத்திரபலியிட்டு, அவர் சமுகத்தில் செய்த பொருத்த னைகளைச் செலுத்தி, அவரைத் தன் நம்பிக்கையாக கொண்டவன் ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை. அவன் ஆபத்தை கண்டு அஞ் சான். ஆபத்துக்காலத்தில் அவன் உன்னதமானவரை நோக்கிக் கூப்பி டுவான், அவர் அவனை எல்லாத் தீங்குக்கும் விலக்கி மீட்பார். இயேசு சொன்னார்: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். பிரியமானவர்களே, உலகத்தை ஜெயங் கொண்ட எங்கள் மீட்பர் எங்களோடிருப்பதால்;, நாங்கள் ஆபத்தைக் கண்டு சோர்ந்து போகாமல், திடமனதோடு அவரைப் பற்றிக் கொள்ளுவோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, ஆபத்து நாட்கள் என்னை சூழ் ந்து கொள்ளும் போது, நான் பதறிப்போகாமல், உம்மை பற்றிக் கொண்டு, உம்முடைய நிழலிலே தஞ்சமடையும்படியாய் என்னை வழிநடத் தும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 50:14-15