புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 06, 2018)

சமாதானமும் பரிசுத்தமும்

எபிரெயர் 12:14

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்த முள்ளவர்களாயிருக்க வும் நாடுங்கள்; பரிசுத்த மில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.


நாங்கள் தேவனுடைய பிள்ளைகளாக முடியாதபடிக்கு, பரலோகத்திற்கும் எங்களுக்கும் இடையிலிருந்த பெரிதான தடையாகிய பகையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே சிலுவையினாலே கொன்று சமாதானத்தை உண்டு பண்ணினார். அந்த பிரிவினையின் தடைச் சுவரை மீண்டும் நாங்கள், எங்களுடைய வாழ்க்கையிலே கட்டியெழுப்பக் கூடாது. அதெப்படியெனில், சிலர், தாங் கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு உட் பட்டவர்கள் என்பதை மறந்து, தங்களுக்கென ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட சுய ராஜ்யத்திலே, உடன் சகோதரரைக் குறித்ததான கசப்பான வேர் முளைத்தெழும்புவதால், மனிதர்கள், தங்களைச் சுற்றி தாங்களே ஒரு பகையாகிய சுவரை கட்டி விடுகின்றார்கள். அப்படிப்பட்ட சுய நீதியான வாழ்க்கை, பார்ப்பவரின் பார்வைக்கு நன்றாக இருக்கும். இந்த மனிதன் வைராக்கியம் உள்ளவன் என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட வைராக்கியமானது, தேவனைக் குறித்ததாக இருக்காமல், சுய பெருமையுடையதாக இருக்கும். நல்ல வி~யங்களில் வைரா க்கியம் பாராட்டுவது நல்லது. நல் மனட்சாட்சியோடு, தேவனை குறித்த நம்பிக்கையிலே வைராக்கியம் பாராட்டுவது நல்லது. நாங்கள் இந்த உலகில் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் எங்கள் தேவையெல்லாம் இயேசு, அவர் என்னை கைவிடமாட்டார் என்று விசுவாசித்து, அதில் உறுதியாக நிலைத்திருப்பது நல்லது. தேவனுக்கேற்ற வைராக்கிய ங்கள் தாழ்மையை உண்டு பண்ணும். சில சமயங்களிலே,  இன்னுமொரு உடன் சகோதரரோ, சக விசுவாசியோ, உங்களோடு ஒப்புர வாக மனதில்லாமலும், அதற்கு எந்த சந்தர்ப்பத்தை கொடுக்க மனதில்லாமல் இருந்து, தன்னை சுற்றி ஒரு பகையான சுவரை கட்டி எழுப்பினாலும், நீங்கள் அந்த நபருக்கு எதிரான கசப்பான எண் ணங்கள் உங்கள் மனதில் தங்காதபடி  எச்சரிக்கையாயிருக்க வேண் டும். கசப்பான எண்ணங்கள், பரிசுத்தத்தை குலைத்துவிடும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, பகையான எண்ணங்களினால் என் பரிசுத்த வாழ்க்கையை கறைப்படுத்தாதபடிக்கு, யாவரோடும் சமாதான மாக இருக்கும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:31