புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2018)

சத்தியத்தில் வளருங்கள்

நீதிமொழிகள் 23:23

சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்ப டியே ஞானத்தையும் உப சத்தையும் புத்தியையும் வாங்கு.


பல மனிதர்கள் அற்ப காரியங்களுக்காக தங்கள் நீதி நியாயங்களை விட்டு போய்விடுகின்ற காலமாக இருக்கின்றது. தங்கள் வாழ்க்கைப் படகில் தென்றல் வீசும் போது, எல்லாமே நன்றாக நடைபெறுகின்றது. ஆனால் புயல்காற்று வீசும் போது, தங்கள் வாழ்க்கைப் படகின் மாலுமி யார் என்பதை மறந்து, தாங்கள் நம்பின, உபதேசித்த, அனு பவித்த உண்மைகளை விற்றுப் போடு கின்றார்கள். பல ஆண்டுகளாக கர்த்த ருக்கென்று வைராக்கியமாக வாழ்ந்த வர்கள், இந்த உலகத்தோடு அழிந்து போகும், பொருட்கள், பணம், பதவி, அந்தஸ்து போன்றவற்றிற்காக தேவ னையே மறுதலித்து விடுகின்றார் கள். நாங்கள் அறிந்த சத்தியத்தை அற்ப காரியங்களுக்காக விற்றுப் போடாமல், சத்தியத்திலே இன்னுமாய் வளரவேண்டும். ஏசா என்னும் மனிதன், தன் குடு ம்பத்தில் மூத்தவனாக இருந்தான். சேஷ்ட புத்திர பாகம் அவனுடையது. பிறப்பிலே தன் தந்தையின் சுத ந்திரத்தின் இரட்டிப்பான ஆசீர்வாதத்திற்கு பாத்திரனாக இருப்பதன் மேன்மையை அற்பமாக எண்ணி, ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்டான். பிற்பாடு ஏசா ஆசீர்வா தத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ள ப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலை யோடே தேடி யும், மனம் மாறுதலைக் காணாமற்போனான். கர்த்தராகிய இயேசுவோடு சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் வாழ்ந்த யூதாஸ், கர்த்த ரோடு இருப்பதன் மேன்மையை அற்பமாக எண்ணி, 30 வெள்ளிக் காசுக்காக தன் எஜமானனை காட்டிக்கொடுத்தான். இவற்றை அறிந்த நாங்கள் எப்போதும், கர்த்தரை அறிகின்ற அறிவிலும், அவ ருக்கு பயப்படும் பயத்திலும் (பயபக்தி) வளரும்படியாய் எப்போதும் சத்தியத்தையும், ஞானத்தையும், உபதேசத்தையும், புத்தியையும் அடையும் வழிகளை நாடித் தேட வேண்டும். குடும்ப கௌரவம், சமுக அந்த ஸ்து அல்லது எப்படிப்பட்ட அற்ப ஆதாயத்திற்காகவும் நாங்கள் அறி ந்த உண்மையிலிருந்து விலகிவிடக்கூடாது.

ஜெபம்:

பரலோக தேவனே, அழிந்து போகும் அற்ப காரியங்களுக்காக, அழியாததும், மாசற்றதும், வாடாததுமான விலைமதிக்கமுடியாத பரலோக பாக்கியத்தை இழந்து விடாதபடிக்கு என்னை காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 15:1-5