புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 04, 2018)

அடிப்படை உண்மைகள்

பிலிப்பியர் 3:1

மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.


தேவ மனுஷனாகிய பவுல் என்பவர், பரலோகத்திற்கு செல்லும் வழியாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்ததால், சிறையில் போடப்பட்டார். அதாவது, ஜனங்கள், தங்கள் மாயையிலே அழிந்து போகாமல், சத்தியபரராகிய இயேசுவை அறிந்து, நன்மை அடையும்படிக்கு வெகுவாய் பிரயாசப்பட்டார். சிறையில் இருந்த நாட்களில், அவர் தன் பாடுகளை பற்றி முறுமுறுக்காமல், சிறையிலே தான் சந்திக்கும் அனைவருக்கும் நற்செய்தியை அறிவித்தார். சிறையில் இருக்கும் போது, பிலிப்பி யருக்கு ஒரு அழகான நிருபத்தை எழுதினார். எந்த சூழ்நிலையைக் கண்டும் மருண்டு போகாமல், கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்ப டிக்கும், பின்னான காரியங்களை மற ந்து முன்னானவைகளை நாடி, தேவன் அழைத்த அழைப்பை நோக்கி ஓடும்படிக்கு அறிவுரை கூறியிருக்கின்றார். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும் என்று கூறினார். சில வேளைகளிலே நாங்கள், புது வெளி ப்பாடுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிகமாக பிரயாசப் படுவதால், கிறிஸ்தவத்தின் அடிப்படைக் காரியங்களை மறந்து போய் விடுகின்றோம். வேதத்திலே உள்ள அநேக காரியங்களை கற்ற பின், அவைகளை அப்படியே விட்டுவிடுவதைவிட, ஏற்கனவே நாங்கள் அறிந்த அடிப்படை உண்மைகளை எங்கள் வாழ்வில், செயற்படுத்துவதே மேலா னது. அந்த கருத்தை மையமாக வைத்தே தியானக் குறிப்புகளில், எங்கள் உள்ளான மாற்றங்களை குறித்தே அதிகமாக தியானிக்கின் றோம். தேவனோடுள்ள உறவில் நீங்கள் வளரும் போது, இன்னும் அறிய வேண்டிய காரியங்களை தூய ஆவியானவர் தாமே உங்களு க்கு, தேவ சித்தப்படி வெளிப்படுத்துவார். வேதத்திலே பல இடங்க ளில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, சவால்கள் நிறைந்த சூழ்நிலை யிலும்  முறுமுறுக்காமல், இதுவரை நடத்திய தேவன் இன்னமும் நடத்துவார் என்ற நம்பிக்கையுடன், கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:

அன்பான தேவனே, அநேக காரியங்களை கற்க வேண்டும் என்று பிரயாசப்பட்டு, அடிப்படை உண்மைகளை மறந்து விடாதபடிக்கு, கருத்துடன் ஜீவிக்க, உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 10:9-11