புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2018)

கர்த்தரை பற்றும் பயம்

நீதி 23:17-18

உன் மனதைப் பாவிகள் மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை  வீண்போகாது.


நான் எவ்வளவு அதிகமாய் பிரயாசப்பட்டாலும்;, ஒரு வட்டத்திற்குள்தான் நிற்கின்றேன் ஆனால் ஊரிலே தங்கள் ஈஷ்டப்படி வாழும் பலர், களிப்புடன் நாட்களை கழிக்கின்றார்கள் என்று ஒரு மனிதன் தன் மனதில் சொல்லிக் கொண்டான். தேவனுடைய வார்த்தையின்படி தன் வாழ்க்கையை வாழும், தேவ பிள்ளைகளின்; கைகளின் பிரயாசங்களை சற்று உற்று நோக்கிப் பாருங் கள். அவை தேவ நீதிக்கு உட்பட்டவை கள். அவை ஒவ்வொன்றிற்கும் கைமாறு உண்டு. இந்த பூமியிலே எங்கள் வாழ்க்கைகளின் வருடங்கள் 100 என்று ஒரு பேச்சுக்கு சொல்லுவோமாக இருந்தால். அந்த வருடங்களிலே, சரீரத்தில் பெலனுள்ள ஆண்டுகளிலே, என் கைமாறு பலுகிப் பெருக வேண்டும் என்றே மனிதர்கள் விரும்புகின்றார்கள். இந்த உலக போக்கின்படி, மனிதனுடைய வாழ் க்கை இந்த பூமியோடு முடிந்து போகின்றது. ஆனால் கர்த்தரின் கணக்கில் எங்கள் வாழ்க்கை குறிப்பிட்ட ஆண்டுகளுடன் முடிந்து போவதில்லை. உங்கள் ஒவ்வொரு நீதியின் கிரியைகளுக்குரிய பலன் நிச்சயம் உண்டு. அதுமட்டுமல்லாமல், உங்கள் பூவுல வாழ்க்கையில் தேவனு டைய கரம் உங்களோடிரு ப்பதை உற்றுநோக்கிப் பாருங்கள். எனவே, இந்த உலக போக்கின்படி வாழும் மனிதர்களின் மேல் கண்களை வைத்து, அவர்கள் வாழ்க்கையை குறித்து பொறாமை கொள்ளக் கூடாது. மாறாக, அவர்கள் வாழ்க்கையை பார்த்து பரிதாபம் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த உலகத்தில், பொருளாதர ரீதியிலே, ஒரு மனிதனுடைய வாழ்க்கை எந்நிலையில் இருந்தாலும், இயேசுவினால் உண்டான இரட்சிப்பு அவன் வாழ்க்கையில் இல்லாதிருக்குமென்றால், அவனுடைய முடிவு மிகவும் பரிதபிக்கப்படத்தக்கது. எனவே, சோர்ந்து போகாமல், எப்போதும் கர்த்தரைப் பற்றும் பயபத்தியோடு வாழ்ந்து, தேவ நீதிக்குரிய கிரியைகளை நடப்பிப்பதே எங்களுடைய பாக்கியம். நாங்கள் கர்த்தர் மேல் கொண்டிருக்கி;ன்ற நம்பிக்கை ஒரு நாளும் வீண்போகாது.

ஜெபம்:

பரலோக தேவனே, உலகத்தின் மேல் என் கண்களை வைத்து என் வாழ்க்கையின் மேன்மையை அளவிடாமல், உம்முடைய கரம் என்னோடிருப்பதன் மேன்மையை உணர்ந்து கொள்ளும் பாக்கியத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-5