புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 30, 2018)

பிள்ளைகளுக்குரிய சிட்சை

நீதிமொழிகள் 23:14

நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.


உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் என உங்களிடம் கேட்டால், என்ன பதில் கூறுவீர்கள்? சில வேளைகளிலே, சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறு த்து பதில்கள் வேறுபடலாம். ஆனால், உங்கள் உள்ளத்தில் இருக்கும் உண்மையான பதில்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். பிள் ளைகள் எப்படியாக வாழவேண்டும் என்னும் பட்டியல் ஒன்றை தயாரிக்கும் படி கூறினால், அந்த பட்டியலில் பிள் ளைகளின் பொருளாதாரம் சுபீட்சம் முக்கிய இடத்தில் இருக்கும். ஏனெ னில், மனிதர்களுடைய பிரயாசங்களின் பெரும்பகுதி உணவு, உடை, உறை யுள் போன்ற ஜீவனத்துக்கு தேவையா னதை மையமாக கொண்டதாகவே இருக்கின்றது. அதாவது, இந்த உலக த்திலே வாழும் வாழ்க்கையை குறித்ததாகவே அமைகின்றது. அதில் பிள்ளைகள் உச்ச நிலையை அடைய வேண்டும் என்று, பெற்றோரின் பிரயாசமும் அதிகம். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கும்படி, அவர்களுக்கு மேலதிகமாக மாலை நேர வகுப்புகளை ஆயத் தப்படுத்தி, கண்டிக்க வேண்டிய நேரத்தில், முறையாக கண்டித்து நடத்துகின்றார்கள். இவைகளில் நன்மை உண்டு. ஆனால், இதைவிட அதிகமாக பிள்ளைகளின் ஆத்துமாவைக் குறித்து கரிசனையுடைய வர்களாக இருக்க வேண்டும். பிள்ளை படித்த பின், அவனுடைய நாட்கள் வரும்போது ஆண்டவரை தேடுவான் என கூறி, ஆத்துமா விற்குரிய விடயங்களை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிடு கின்றார்கள். கர்த்தரின் கிருபை இல்லாமல், மனிதனுடைய பிரயாசத்தின் பலன் ஒன்றுமில்லை. எனவே பிள்ளைகளின் ஆத்துமாவை பாதாளத்திற்கு தப்புவிக்கும்படிக்கு அவர்கள் நடையை சின்ன வயதில் இருந்தே சீர் ப்படுத்த வேண்டும். பெலனற்றுப்போகும்படியான கடுமையான சிட் சையில் அல்ல பிள்ளைகளுக்குரிய சிட்சையிலே வளர்க்க வேண் டும். எங்கள் பரம பிதா தாம் நேசிக்கின்ற பிள்ளைகளை சிட்சிப்பது போல, நாங்களும் பிள்ளைகள் தேவனுக்குள் அதிக கனி கொடு க்கும்படியாய், சிட்சிக்க வேண்டிய இடங்களில் சிட்சித்து நடத்த வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள அப்பா பிதாவே, நீங்கள் எங்களில் அன்புகூர்ந்து, அதிக கனிகளை கொடுக்கும்படி சுத்திகரிப்பதைப் போல,  நாங்களும் எங்கள் பிள்ளைகளை அன்புடன் சிட்சித்து நடத்தும்படி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 19:18