புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 29, 2018)

மனஅடக்கம்

நீதிமொழிகள் 16:32

பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.


மனிதர்கள் நாளாந்தம் தங்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சூழ் நிலைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதிருக்கும் போது அதி ருப்தியடைகின்றார்கள். தங்கள் அதிருப்தியை பலவிதமாக வெளி க்காட்டுவார்கள். சிலர் கோபம் அடைக்கின்றார்கள். தங்கள் கோப த்தை, வார்த்தைகள் வழியாகவும், கிரி யைகள் வழியாகவும் வெளிக்காட்டுகி ன்றார்கள். பொதுவாக மனிதர்கள்; தங்கள் குடும்பம், உறவினர், நண்பர் கள், சக வேலையாட்கள், சக விசுவா சிகள், சக மாணவர்கள், பாடசாலை, சபை இப்படியாக எல்லாம் தங்கள் கட்டுப்பாடிற்குள் இருக்கும் போது திருப்தியடைவார்கள். இன்று இப்படி யாக, எந்த ஒரு அமைப்போ அல்லது எந்த ஒரு மனிதனோ பூரண மாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற எதிர்பா ர்ப்புடன் நீங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால், பல ஏமாற்றங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றது. சற்று தரித்திருந்து ஆராய்ந்து பார்ப்பீர்கள் என்றால், பல வேளைகளில், மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையே அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. எனவே எல்லா சூழ்நிலைகளும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு, நாங்கள் தேவனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படியாய் தேவ வார்த்தைகளுக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண் டும். பல வேளைகளில், மனிதர்கள் தாங்கள் பேசும் ஒரு சில வார் த்தைகளை கட்டுப்படுத்துவார்களாயிருந்தால், பெரிதான கலகங்களை அடக்கி விடுவார்கள். மனிதர்களுடைய எண்ணங்கள் வார்த்தைகள் வழியாகவும், கிரியைகளினாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. நாவை அடக்க ஒரு மனு~னாலும் கூடாது அது அடங்காத பொல்லாங்கு ள்ளதும் சாவுக்கேதுவான வி~ம் நிறைந்ததுமாயிருக்கிறது. ஆனால், மனு~னால் கூடாதது, தேவனால் கூடும். எங்கள் வாழ்வை தேவனு க்கு ஒப்படைக்கும் போது, ஆவியின் கனி எங்களில் வெளிப்படுகி ன்றது.  அந்த கனியின் சுபாவங்களாகிய சாந்தம், நீடிய பொறுமை எங் களுக்கு மன அடக்கத்தை உண்டுபண்ணும். எனவே எந்த சூழ்நிலைக ளைக் கண்டும் நாங்கள் கட்டுப்பாடற்றவர்களாகி, அதன்படி கிரியை களை நடப்பிக்காமல், தேவ வார்த்தைக்கு கட்டுப்பட்டிருப்போம்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, எங்களை நம்பி வருகின்றவர்களுக்கு நாங் கள் எந்த விதத்திலும் துரோகம் செய்யாமல், அவர்களுக்கு உம்முடைய அன்பை வெளிப்படுத்த என்னை உணர்வுள்ளவனாக்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 1:7