புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 28, 2018)

பொறுமையோடு காத்திருப்போம்

ரோமர் 8:25

நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.


கானகபாதை வழியாக இலட்சக்கணக்காண ஜனங்கள், செழிப்புள்ள கானான் தேசத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வழியிலே பல சவால்களை சந்திக்க நேரிட்டது. பொதுவாக, பாலை வனத்திலே இரவிலோ அல்லது பகலிலோ, மனிதர்கள் வசிப்பதற்கு சாதகமான காலநிலை இருப்பதில்லை. ஆனால் தேவன்தாமே, அவர் கள் வெயிலில் வெந்து போகாமல் மேகஸ்தம்பத்தாலும்;, இரவிலே அக்கி னிஸ்தம்பத்தினாலும் காத்துக் கொண் டார். அவர்களுடைய தேவைகள் எல் லாவற்றையும் தேவன் சந்தித்தார். சாதாரணமாக, நாங்கள் ஒரு தூர தேச த்திற்கு போவதற்காக, பல நாட்களு க்கு பிரயாணப்பட்டு செல்லும், போது, வழி யிலே சலிப்படைந்து விடுகின் றோம். அந்த வேளைகளிலே முறுமுறுக்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த முறுமுறுப்புக்கள் பிரயாணிகள் மத்தியிலே பிரிவினைகளை கொண்டு வருவதால், ஒன்றுபட்டு செயற்படுவதற்கு பதிலாக, ஒருவர் செய்வதை மற்றவர் விமர்சிப்பதால், கலகங்களை உண்டாக்கி விடுகி ன்றது. இதே போலவே, பாலைவனத்தில் பிரயாணப்பட்டு சென்ற இஸ்ரவேலருக்கு, பரபரப்பு அற்றுப் போனதால், தங்களை வழிந டத்திச் சென்ற மோசேக்கு எதிராக அவ்வப்போது கலகங்களை ஆரம் பித்தார்கள். அதனால் பலர் வனாந்திரத்திலே அழிந்து போனார்கள். இதற்கொத்ததாகவே, நாங்களும் பரலோகத்திற்கு பிரயாணப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையிலே, சென்றடையும் இடத்தை குறி த்த மேன்மையின் உணர்வை இழந்து போகும் போது கலகங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தி விடுகின்றோம். இதனால் ந~;டமே அன்றி இலாபம் ஏதுமில்லை. கலகங்களும் பிரிவினைகளும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருவதில்லை. தேவனுடைய வார்த் தைக்கு கீழ்ப்படிந்து, பொறுமையாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்கும் நாட்களிலே, ஏதாவது புதுக் காரியங்களை தேவனுக்கென்று செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றும் போது, அந்த காரியங்கள் எப்படி எங்கள் குறிக்கோளாகி பரலோகதை சென்றடைய உதவி செய்யும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பக்திவிருத்திக்கு ஏதுவல்லாதவைகளை விட்டுவிடுங் கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள பரலோக பிதாவே, உம்மை தரிசிக்கும் நாள்வரைக் கும், சலிப்படையாமல், பரலோக மேன்மையை உணர்ந்தவனா(ளா)க, பொறுமையோடு ஜீவனம் பண்ண எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:12

Category Tags: