புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2018)

சபை கூடிவருதல்

எபிரெயர் 10:25

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்;


சிறுபிராயத்திலே தன்னைச் சூழ்ந்திருந்த சில உறவுகளால் திட்டமிட ப்பட்டு செய்யப்பட்ட கொடூரமான சம்பவங்கள், ஒரு மனிதனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் தான் பட்ட துன்பங்களை மைய மாக வைத்து, இந்த உலகிலே பிள்ளைகளை பெறுவது தவறு என்ற முடிவிற்கு வந்துவிட்டான். சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் கடந்த கால அனுபவங்களை வைத்து, முழு உலகிலுள்ள ஜனங்களையும் நியாயந்தீர்த்துவிடுகின்றார்கள். இப்படியாக, ஆங்காங்கே, சிலர் சபை கூடி வருதல் அவசியமில்லை, கட்டிடங்கள் தேவையில்லை, இவையெல்லாம் ஊழி யர்கள் அநாவசியமான செய்கின்றார் கள் என்று தங்கள் கருத்துக்களை கூறுகின்றார்கள். வேதத்திலே கூறப்பட்ட, கொரிந்து சபையிலே, பல ஒழு ங்கீனங்கள் இருந்தன, அவற்றை சீர் செய்யும் பொருட்டு, தேவ மனு~னாகிய பவுல் வழியாக, தேவன் தாமே, அவர்கள் செய்ய வேண்டியவைகளைப் போதித்தார். அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயும் எங்கள் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது. எனவே, சபை கூடுதல் அவசியமில்லை என்று அநாவசியமற்ற தர்க்கங்களை கிளப்பிவிடும் மனிதர்க ளுக்கு செவி கொடாதிருங்கள். தேவனுடைய வார்த்தையானது, தனி ப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளுவதற்கும், பிரச்சனைகளில் அகப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கும், துன்பத்தில் நாட்களை கழித்தவர்களுக்கு ஆறுத லும், நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு ஆலோசனையும் தருகின்றது. தேவனுடைய வார்த்தையை (வேத வாசிப்பு, தேவ செய்திகள், வேதப்படிப்பு)  அற்பமாக எண்ணுகின்றவர்கள், அழைப்பின் கருப் பொருளை மறந்து, தாங்கள் போகும் இடமெல்லாம், பல குழப்ப ங்களை ஏற்படுத்திவிடுகின்றார்கள். ஒவ்வொருவரும் (ஊழியர்கள், விசுவாசிகள், எல்லா மனிதர்களும்) தன் தன் கணக்கை ஒப்புவிக்கும் நாள் நெருங்குகின்றது. எனவே எந்த ஒரு ஆத்துமாவையும் நீங்கள் இடறல்படுத்தாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, என்னுடைய அபிப்பிராயத்தின்படி தீர்மானங் களை எடுக்காமல், உம்முடைய வார்த்தையின்படி தீர்மானங்களை எடுக்கும்படிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களை எனக்குத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-9