புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 26, 2018)

ஒப்புரவாக ஒப்புரவாக்க…

2 கொரிந்தியர் 5:18

அவர் இயேசுகிறிஸ்து வைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.


எங்கள் கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக, நாங்கள் பரலோகத்திலிருக்கின்ற பிதாவாகிய தேவனோடு ஒப்புரவாக்க ப்பட்டிருக்கின்றோம். முன்பு, பாவத்துக்கு அடிமைகளாகவும், தேவ னுடைய சுதந்திரத்திற்கு பகைஞராகவும் இருந்தோம். அந்த பகையை இயேசு தம்முடைய சிலுவையினாலே கொன்று, எங்களை பரலோக சுதந்திரத்திற்கு பங்காளிகளாக மாற்றி னார். தகுதியற்றவர்களாக இருந்த எம க்கு இப்படிப்பட்ட கிருபையை தந் தார். அப்படியே நாமும், இப்போது இயேசு கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிக ளாக, உலகத்திலே வாழும், பரலோக த்தின் வழியை அறியாதவர்களுக்கு இயேசுவே அந்த வழி என்பதை காண் பிக்கும்படியான பொறுப்பை பெற்றிருக் கின்றோம். உலகத்திலுள்ளவர்களை, தேவனைவிட்டு இன்னும் புறம்பாக தள் ளும்படியாக அல்ல, மாறாக கிறிஸ்து வழியாக தேவனோடு ஒப்புரவாக்கும் ஊழியத்தைப் பெற்றிருக்கின்றோம். அதே வேளையில், நாங்கள் ஒவ் வொருவரும் இசைந்த ஆத்துமாக்களாய், ஒருவரோடொருவர் ஒப்புர வாக்கப்பட வேண்டும். யாதொரு கசப்பான வேர் முளைக்க ஆரம்பி க்கும் போதே, காலதாமதமின்றி, எங்களை தாழ்த்தி, ஒப்புரவாக்க பிர யாசப்பட வேண்டும். சில வேளைகளிலே, எங்கள் கிரியைகளி னாலோ, அல்லது வேறொருவரின் கிரியை யினாலோ, சகோதரரு க் கிடையிலான பிளவுகள், இனிமேல் நாங்கள் சரிசெய்துவிட முடியா தபடிக்கு, எங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றிருந்தால், அதை முற்றி லும் தேவனுடைய பாதத்திலே ஒப்புக்கொடுத்து, ஒப்புரவாகுதலின் சந்தர்ப்பத்தை தேவன் எப்போது உண்டு பண்ணுவார் என ஆவலுடன் காத்திருக்கும் மனநிலையுடையவர்களாக மாற வேண்டும். தீர்த்துக் கொள்ளமுடியாத பகையை தீர்க்கும்படி, நடுநிலை நின்று தேவ ஆலோசனையை கூறி ஒப்புரவாக்கும் நல்ல ஸ்தானாதிபதிகளை நாடி, தங்களுக்கிடையிலிருந்த பகையை தீர்த்துக் கொண்டவர்கள் பலர் இவ்வுலகிலே இருக்கின்றார்கள். எனவே ஒப்புரவாகும், ஒப்புரவாக்கும் கிரியைகளை நடப்பியுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே,  பிரிவினைகளை கண்டும் காணாத வர்களைப் போல வாழாதபடிக்கு, மற்றவர்களோடு ஒப்புரவாக, மற்றவர்களை ஒப்புரவாக்கும் கிரியைகளை நடப்பிக்க அருள் தந்து நடத்தும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 1:13