புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 25, 2018)

வைராக்கியம் உள்ளவர்கள்

யாக்கோபு 3:14

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங் கள் பெருமைபாராட்டாதிருங்கள்;,


தேவனுக்கென்று நல்ல விடயங்களிலே வைராக்கியம் பாராட்டுவது நல்லது. சிலர் மாதத்திற்கு மாதம் உபவாசங்களை கடைப்பிடித்து ஜெபிப்பதில் வைராக்கியமாக இருப்பார்கள். மிகவும் அவசிய மானது! அதை விட்டுவிடாமல், தேவனுடைய வார்த்தையின்படி, உப வாசத்தை கடைப்பிடிக்க வேண்டும். வேறு சிலர், ஒவ்வொரு ஞாயி றும், குடும்பம் சகிதம், தவறாமல் ஆரா தனைக்கு சமுகளிப்பதை, தங்கள் வாழ் க்கையில் பிரதி~;டையாக கொண்டுள் ளார்கள். சபை கூடிவருதல் இன்றிய மையாதது. இன்னும் சிலர்; வாழ்க் கையை கெடுக்கக் கூடிய, மதுபானம் புகைப்பிடித்தல் போன்றவற்றிலும், நெறிமுறையுள்ள வாழ்வின் மேன்மை யை உணர்வற்றதாக்கி, சுத்த மனசா ட்சியை குறுடாக்கிவிடக்கூடிய திரைப் படங்கள், தொலைக் காட்சி நாடகங் கள், வேதத்துக்கு புறம்பான பட்டிமன்றங்கள், ஆகாத சம்பா~னைகள் அடங்கிய கலந்துரையாடல்கள், மற்றும் இன்ரநெற் ஊடங்களிலுள்ள நெறிமுறையற்ற விடயங்கள் போன்ற யாவற்றையும் தங்களை விட்டு முற்றிலும் விலக்கிக் கொள்கின்றார்கள். இது ஞானமுள்ளவர்களின் வைராக்கியம்.  இவைகள் யாவும் நல்லது. பரலோக பொக்கி~த்தின் மேன்மையை உணர்ந்தவர்கள், இந்த உலகின் சுகபோகங்களை ந~;ட மும் குப்பையும் என்று அவற்றை தள்ளிவிடுகின்றார்கள். ஆனால் சில வேளைகளிலே இப்படிப்பட்ட வைராக்கியம் உள்ளவர்களின் இருதயங்களில் மற்றவர்களை குறித்த கசப்பு குடிகொண்டிருக்கலாம். மற்றவர்கள் என்று கூறும்போது, சக ஊழியர், சகவிசுவாசி, சபை, குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள், சொந்தங்கள் போன்றவர்களை குறித்த கோபம், பகை அல்லது எரிச்சல் இருதயத்தில் இருந்தாலும் அவைகளை பாராமுகமாக விட்டுச் சென்றுவிடுகின்றோம். இவைகளை குறித்து நாம் மிகவும் அவதானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் கர்த்தருக்கென்று முன்னெடுக்கும் அநேக தியாகங்களை, நீங்கள் அற்பம் என்று விட்டுவைத்த கசப்புக்கள் முற்றிலும் கெடு த்துவிடும். இது இந்த உலகத்தின் ஞானம். எனவே எப்படிப்பட்ட கசப்பையும் உங்கள் இருதயங்கிளிலிருந்து அகற்றிவிடுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, சுத்தமும், சமாதானமும் சாந்தமும், இணக்க மும், நற்கனிளால் நிறைந்த பரலோக ஞானத்தை உடயவனா(ளா)க, நான் உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:13