புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2018)

உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்

1 கொரிந்தியர் 15:57

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவி னாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.


நாளைய நாளில் முகங்கொடுக்க வேண்டிய சவால்களை எண்ணி எண்ணி, கலக்கமடையாதபடிக்கு, தேவன் எங்களுக்கு தந்த வெற்றிகளை கொண்டாட வேண்டும். எடுத்துக் காட்டாக, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன், மேல் வகுப்புகளில் வர இருக்கும் பாடங்களைக் குறித்து, இப்போது கலக்கமடைவனாக இருந்தால், அவன் இப்போது படிக்கும் பாடங் களை சிறப்பாக படித்து வெற்றி பெற முடியாது. அதே வேளையில், தான் கடந்து வந்த வகுப்புகளில் பெற்ற சிறப்புப் புள்ளிகளிலும், பெற்ற விருது களிலும் பெருமிதம் அடைந்து, அதிலே தரித்திருப்பானாக இருந் தால், அவன் தன் வெற்றியிலே வெறி கொள்கின்ற வனாக இருப்பான். அதாவது, எப்படி ஒரு மனிதன் மதுபானத்தால் வெறி கொண்டிருக்கும் போது, தன் சுயநி னைவை இழந்து, சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் உண ர்வற்றவனாக இருக்கின்றானோ, அதே போல, சில மனிதர்களின் வாழ்வு, பல ஆண்டுகளுக்கு முன் பெற்ற வெற்றிகளில் முழ்கிவி டுவதால், மதிமயங்கி, தற்போதைய செயற்பாடுகளிலிருந்து பின்வா ங்கி விடுகின்றார்கள். அப்படியானால் வெற்றியை கொண்டாடுவது என்பதின் பொருள் என்ன? முதலாவதாக, ‘தேவன்தாமே, கிறிஸ்து வுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப் பண்ணுகின்றார்’. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்’ ‘இவையெல்லா வற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே’ என்னும் வேத வாக்கியங்களுக் கமைய தேவனுடைய அனுக்கிரகத்தாலே எங்களுக்கு வெற்றி கிடை த்தது என்பதை எப்போதும் அறிக்கையிட வேண்டும். இப்படிப்பட்ட அறிக்கையானது, நாளைய நாளின் சவால்களை நாங்கள் ஜெயங் கொள்ளும்படி, தேவனைப் பற்றும் விசுவாசத்தில் எங்களை பெருகச் செய்கின்றது. நாங்கள் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம். எனவே நாளைய தினத்தை குறித்து கவலையடையாமல் தேவன் வெற்றி தருவார் என்று விசுவாசித்து, எங்களை தாழ்த்தி அவர் தந்த வெற்றிகளை அறிக்கையிடுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, கடந்த கால வெற்றிகளால் நிர்விசாரம் அடைந்துவிடாமல்,  நீர் என்னுடைய சகாயர்,  வெற்றி உம்மாலே வரும்! என்று அறிக்கை செய்து, உம்மில் விசுவாசமாக இருக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:1-5